மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில்
வாகனம் விபத்து
ஆறு பேர் படுகாயம்
மட்டக்களப்பு
- கொழும்பு பிரதான வீதியில் அதி சொகுசு
வாகனம் ஒன்று
பாரிய விபத்துக்குள்ளானதில்
ஆறு பேர்
படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச்
சம்பவம் இன்றைய
தினம் (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில்
இருந்து காத்தான்குடி
நோக்கி வந்த
சொகுசு வாகனம்
மட்டக்களப்புக்கு மின்சாரம் வழங்கும் பிரதான மின்
கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச்
சம்பவத்தினால் பிரதான மின்சார கம்பம் பாரிய
சேதமடைந்துள்ளதுடன் வாகனமும் கடுமையான
சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்
கூறியுள்ளனர்.
விபத்தில்
காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
யாருக்கும் உயிர் ஆபத்து இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம். ஜெய்னுதீன் (வயது 72) அவரது மனைவி (வயது 65), எம். றிஷாட் (வயது 36) அவரது மனைவி (வயது 35) மற்றும் முஹம்மட் ஸக்கூர் (வயது 22) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.