அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ குறித்து
அமைச்சரவை துணைப்பேச்சாளர்கள் கருத்து தெரிவிப்பு
அமைச்சர்
கலாநிதி விஜயதாச
ராஜபக்ஸ தொடர்பாக ஐக்கிய
தேசியக்கட்சியின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது
தொடர்பான விடயத்தை
ஜனாதிபதி, விஜயதாச
ராஜபக்ஸவிற்கு
இன்று அறிவித்ததாக
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும்
அமைச்சரவை துணைப்பேச்சாளருமான
கயந்த கருணாதிலக
சற்றுமுன்னர் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்
மாநாட்டில் தெரிவித்தார்.
செய்தியாளர்
: அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அமைச்சுப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரா?
இந்த
மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான
தயசிறி ஜயசேகர
பதிலளிக்கையில் இது தொடர்பான முடிவை இன்னும்
சற்றுநேரத்தில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்
என்று குறிப்பிட்டார்.
அமைச்சரவை
உறுதிப்பாட்டை மீறி செயற்பட்டமைதொடர்பில் ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினரான அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிராக
கட்சி மேற்கொண்ட
தீர்மானத்தையே ஜனாதிபதிக்கு சமர்ப்பித்திருந்ததாகவும்
, ஐக்கியதேசியக்கட்சியின் முக்கியஸ்தரும் துணைப்பேச்சாளருமான
கயந்த கருணாதிலக
மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment