தென் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சந்தன பிரியந்த, செங்கோலை எடுத்துக்கொண்டு கழிவறையை நோக்கி ஓடியதால் சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சந்தன பிரியந்தவை மேலும் சில உறுப்பினர்கள் பின் தொடர்ந்து சென்றனர். எவ்வாறாயினும், சில உறுப்பினர்கள் இணைந்து செங்கோலை மீண்டும் சபைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்ட மூலம் இன்றைய தினம் தென் மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அது 27 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

குறித்த சட்ட மூலம் மாகாண சபைகளின் அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாகாண சபையில் குறித்த சட்டமூலம் தோல்வியடைந்துள்ளது.

இந்த சட்ட மூலம் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் படுத்தும் 27 பேர் சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது முதலமைச்சர் சான் விஜேலால் சில்வா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சபையில் இருக்க வில்லை

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top