நல்லிணக்கத்தை உருவாக்க

பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்

ஏறாவூரில் ரணில் விக்கிரமசிங்க


இந்த நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஏறாவூரில் புதிய நகர சபைக் கட்டிடத்தை இன்று (20.8.2017) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அழைப்பின் பேரில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு தொடாந்துரையாற்றுகையில்
 யுத்தம் முடிவடைந்த போதிலும் இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் இருக்க வில்லை. சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக இணைந்து மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கி நல்லாட்சியை நாம் உருவாக்கினோம்.ஜனாதிபதியும் நாங்களும் இணைந்து இந்த நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதே போன்று இனவாதத்தினை ஒழிப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
 அந்த வகையில் கிராமங்கள் தொடக்கம் நகரங்கள் வரை அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
 இன்று இந்த ஏறாவூர் நகர சபை கட்டிடத்தினை திறந்து வைப்பதற்காக என்னை அழைத்தமைக்காக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு நன்றி கூறுகின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் அமைச்சர்களும் இந்த பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு பட்ட முயற்சிகளை எடுத்துள்ளார்கள். நாங்களும் அவர்களுக்கு உதவி செய்துள்ளோம்.
 கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களின் செயற்பாடுகளுக்கு எமது ஒத்துழைப்பும் ஆதரவும் என்றும் உண்டு.
 கிழக்கு மாகாணத்தில் தமிழ் சிங்கள் முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் வாழ்கின்றார்கள் அதே போன்றுதான் அமைச்சர்களும் இருக்கின்றார்கள்.
 சிறு இனவாதிகளாக இருக்கின்றவர்கள் இந்த ஒற்றுமையை குழப்புவதற்கு முயற்சி எடுக்கின்றனர். அவர்களுக்கு முன்பாக நாம் ஒற்றமையாக இருக்கின்றோம்.
 ஒரு வருடத்திற்கு முன்னர் வடமாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் என்னை சந்தித்தித்து வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் மற்றும் ஆசிரிய நியமனம் தொடர்பாக பேசினார்கள்.
 அந்த வகையில்  நிதியமைச்சருடனும் கல்வியமைச்சருடனும் பேசி இந்த கிழக்கு மாகாணத்தில் 1700 ஆசிரியர்களுக்க ஆசிரிய நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 தொழில் இல்லாமல் பட்டதாரிகள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களை செய்கின்றார்கள்.
 அந்த அடிப்படையிலேயே அபிவிருத்தி உதவியாளர்களாக 20000க்கு மேற்பட்டவர்களை இணைத்துக் கொள்வதற்காக எனது அமைச்சிலே இருந்து ங்கள் விண்ணப்பங்களை கோரியிருக்கின்றேன்.
 இந்த அபிவிருத்தி உதவியாளர்கள் பல்வேறுபட்ட விடயங்களில் ஈடுபடுவார்கள். வருமானத்தை பார்ப்பதற்கு மற்றும் சிறுகைத்தொழில் மற்றும் விவசாயம் பெண்கள் அப்விருத்தி போன்றவைகளில் ஈடுபடுத்தவுள்ளோம்.

அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியதன் பின்னர் அவர்களிடம் கடமைகளை கையளிக்கவுள்ளோம்.  இவைகளை செய்வதற்கு சில காலம் எடுத்துள்ளது. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆரம்பித்த போது நாட்டில் கடன் சுமை இருந்தது.
 தேசிய வருமானத்தை பார்க்கின்ற போது வட்டியைக் கொடுப்பதற்கு கூட போதாமல் இருக்கின்றது. இந்த நாட்டை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாததால்; தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேர காலத்தோடு ஆட்சியை கலைத்து விட்டார்.
 இந்த நெருக்கடி நிலைமை எடுத்துக் கொண்டுதான் இந்த நாட்டை முன்னேற்றி வருகின்றோம்.
 எல்லாப்பிரச்சினைகளையும் தீர்த்துக் கொண்டு இந்த நாட்டின் தேசிய வருமானம் படிப்படியாக கூடி வருகின்றது. எதிர்கால முதலீடுட்டு செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளித்து வருகின்றோம்.
 இந்த நிலையில்தான் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டுமென எதிர்பார்தோம். அவர்களுக்கும் எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 யுத்தத்திற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் எந்த அபிவிருத்தியும் இடம் பெற்றிருக்க வில்லை.  அந்த அடிப்படையில் விஷேடமான திட்டமாக மத்திய துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்துள்ளோம்.
 திருகோணமலை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தினை தயாரிப்பதற்காக சிங்கப்பூரிலுள்ள நிறுவனமொன்றுடன் பேசி அதை திட்டமிட நடவடிக்;கை எடுத்துள்ளோம். இதன் மூலம் பல்வேறு அபிவிருத்திகள் முன்னேற்ற மடையும்.

இந்தியாவும் ஜப்பானும் இதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது.இந்த திட்டம் நல்ல முறையில் நிறைவடையும் போது பத்துவருடத்திற்கு தொடர்ந்து நல்ல முறையில் அபிவிருத்தி திட்டங்களை செய்யக் கூடியதாக இருக்கும்.
 தென் மாகாணத்தை போன்;று கிழக்கு மாகாணத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். யுத்தத்தினால்தான் அபிவிருத்தியில் கிழக்கு மாகாணம் பின்னடைந்து சென்றது.
 முதன் முதலாக கரையோரப்பிரதேசங்களில் சுற்றுலாத்துறைக்கான காணிகளை அடையாளம் கண்டு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து கொண்டு செல்கின்றோம்.
 இதன் பின்னர் தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கும் அதே போன்றுதான் விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். மட்டக்களப்பு விமானப்படை விமான நிலையத்தினையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம்.
 கிழக்கு மாகாணத்தில் காணப்படும் விலங்கு வேளான்மை போன்றவற்றையும் அபிவிருத்தி செய்ய நாங்கள் உதவி செய்வோம். அடிப்படை வசதிகளையும் நாங்கள் செய்ய வேண்டும். ஜனாதிபதி இதற்கு முழு ஆதரவையும் வழங்கி வருகின்றார்.
 அதே போன்று ஹம்மாந்தோட்டையில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இந்த திட்டம் முடிவடையும் போது மத்தள விமான நிலையத்தை பாரம் எடுப்பதற்காக வேறு நிறுவனம் முன் வந்துள்ளது. தற்போது ஹம்மாந்தோட்ட பிரதேசத்தில் பாரிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பித்துள்ளோம்.

 இதனூடாக ஹம்பாந்தோட்டையில் பாரிய அபிவிருத்திகள் இடமபெறவுள்ளன. இந்த அபிவிருத்தி திட்டங்கள் அங்கிருந்த கிழக்கு மாகாணத்திற்கும் நகரவுள்ளது. இதற்கு மக்கள் பூரண ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top