மத்திய வங்கி பிணை முறி ஊழல் விவகாரமானது ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததுடன் ஓய்ந்துவிடவில்லை.

இதுதான் ஆரம்பம்.இதனுடன் தொடர்புபட்ட இன்னும் பலர் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவுள்ளனர்.

இந்த ஊழலுடன் தொடர்புபட்ட பேர்பேச்சுவல் நிருவனத்தின் உரிமையாளர் அர்ஜுன ஆலோசியஸ் ரவி கருணாநாயக்கவுக்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததுபோல் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள இன்னும் பலருக்கு பணம் மற்றும் காணி போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளாராம்.

குடும்பத்தில் உள்ள வேறு நபர்களின் பெயரில்தான் இந்தச் சொத்துக்கள் உள்ளனவாம்.ஜேவிபி இவற்றைத் தேடுகிறதாம்.இந்த நிலையில்,ஆலோசியஸ் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கும் லஞ்சம் வழங்க முற்பட்டமையை அறிய முடிந்துள்ளது.

அதாவது,மத்திய வங்கி பிணை முறி தொடர்பான கோப் அறிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலேயே அதில் ஐ.தே.க உறுப்பினர்கள் அடிக்குறிப்பிட்டனர்.இந்த அடிக்குறிப்பை இட வைத்தவர் ஆலோசியஸ்தானாம்.

இதற்காக ஒவ்வொருவருக்கும் அவர் இரண்டு லட்சம் ரூபா லஞ்சம் வழங்கியதோடு ரஞ்ஜன் ராமநாயக்காவுக்கும் வழங்க முற்பட்டாராம்.ஆனால்,அவர் வழங்க மறுத்துவிட்டாராம்.

அண்மையில்,நிகழ்வு ஒன்றில் ரன்ஜனும் ஜேவிபியின் வட மத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்கவும் சந்தித்துக்கொண்டனர்.ஊழல்கள் தொடர்பில் அவர்கள் பல விடயங்களை பேசிக்கொண்டனர்.அப்போது ரஞ்ஜன் மேற்படி சம்பவத்தை வசந்த சமரசிங்கவிடம் கூறி இருக்கின்றார்.

ஆனால்,யார் யார் இவ்வாறு பணம் பெற்றார்கள் என்ற விவரத்தைக் கூறவில்லையாம்.

அப்போ,,இன்னும் நிறைய நம்பிக்கை இல்லா பிரேரணைகளைக் காணலாம்போல.

[எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்]

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top