சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை
சகல அரசியல் கட்சிகளின் அங்கிகாரம் பெறப்பட்ட
நியாயமான கோரிக்கையாகும்
சாய்ந்தமருது -
மாளிகைக்காடு ஜும் ஆப் பாளிவாசல் தலைவர்
சாய்ந்தமருது
உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை சகல அரசியல்
கட்சிகளின் அங்கிகாரத்துடனும் ஆதரவுடனும்
ஒத்துழைப்பும் பெறப்பட்ட கோரிக்கையாகும்.என சாய்ந்தமருது
– மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவர் வை எம்.
ஹனிபா தெரிவித்தார்.
சாய்ந்தமருது
ஜும் ஆப்
பள்ளிவாசல் காரியாலயக் கட்டடத்தில் இன்று 21 ஆம்
திகதி மஃரிப்
தொழுகையை அடுத்து
இடம்பெற்ற விசேட
செய்தியாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
தலைவர்
வை எம்.
ஹனிபா இங்கு
தொடர்ந்து பேசுகையில்,
சாய்ந்தமருது
– மாளிகைக்ககாடு ஜும் ஆப் பள்ளிவாசலின் இக்கோரிக்கை
முஸ்லிம் காங்கிரஸ்,
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்,
தேசிய காங்கிரஸ்
உட்பட சகல
அரசியல் கட்சிகளின்
அங்கிகாரம் பெற்ற நியாமான கோரிக்கையாகும்.
இந்த
நியாமான கோரிக்கையை
சில இயக்கங்கள
தடுக்க முயற்சிக்கிறார்கள்.
அவர்களின் முயற்சியின்
விளைவுதான் எமது இன்றைய சந்திப்பாகும். எங்களின்
நியாயமான உரிமையை
விட்டுக் கொடுப்பதற்கு
நாங்கள் தயாரில்லை.
எமது உரிமையைப்
பெற்றெடுக்க வேண்டுமானால் அதற்கு போராடத்தான் வேண்டும்..
நாங்கள்
இது தொடர்பாக
யாரையும் குற்றம்
சாட்டவோ எந்தக்
கட்சிக்கும் எதிராகவோ அல்லது மாறாகவோ செயல்படுவது
நோக்கமல்ல. நாங்கள் சாத்வீகமான முறையிலேயே போராடுகின்றோம்.
இது ஒட்டு
மொத்த சாய்ந்தமருது
மக்களின் நியாயமான
கோரிக்கை என்பதை
இங்கு தெளிவுபடுத்த
விரும்புகின்றோம்
.
சாய்ந்தமருதுக்கான
தனியான உள்ளூராட்சி
மன்றம் குறித்து
எதிர்வரும் 28 ஆம் திகதி வர்த்தமாணி அறிவித்தல்
மூலம் பிரகடனப்படுத்தப்படும்
என அகில
இலங்கை மக்கள
காங்கிரஸ் பிரதித்
தலைவர் ஏ.எம்.ஜெமீல்
அவர்கள் எங்களிடம்
தெரிவித்தார். ஆனால் இன்று காலை முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் அவர்களிடமிருந்து
எதிவரும் 23 ஆம் திகதி பிரடணப்படுத்தப்படும் என்ற தகவல் வந்தது.
சாய்ந்தமருது
தனியான உள்ளூராட்சி
மன்றம் பிரகடணம்
தொடர்பாக இரண்டு
தகவல்கள் வந்துள்ளன.
ஆனால், நடக்கப்
போவது என்பது
உறுதியானது.இவ்வாறு தலைவர் வை எம்.
ஹனிபா தெரிவித்தார்.
இங்கு
அகில இலங்கை
மக்கள காங்கிரஸ்
பிரதித் தலைவரும்
முன்னாள் கிழக்கு
மாகாண சபை
உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் அவர்கள்
செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சாய்ந்தமருது
மக்களின் நியாயமான
தனியான உள்ளூராட்சி
மன்றக் கோரிக்கையை
பள்ளிவாசல் அமைப்புக்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள்
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர், இப்பிரதேச
பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர்களிடம் பலமுறை சந்தித்தும்
இப்படியான ஏற்பாடுகளைச்
செய்தும் அதில்
கால தாமதம்
ஏற்பட்டதை அடுத்து
நான் சார்ந்துள்ள
கட்சியான அகில
இலங்கை மக்கள
காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் றிஷாத்
பதீயுதீன் அவர்களிடம்
சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையைச் சமர்ப்பித்து
அதன் மூலம்
அவர் எடுத்த
நடவடிக்கையை அடுத்து உள்ளூராட்சி அமைச்சர் பைஸல்
முஸ்தபா அவர்களை
சாய்ந்தமருதுக்கு நேரடியாக அழைத்து வந்து இம்மக்களின்
நியாயமான தனியான
உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக
வாக்குறுதியும் அளித்திருந்தார்.
கடந்த
வாரம் அமைச்சர்
பைஸல் முஸ்தபா
வெளிநாட்டுப் பயணம் ஒன்றுக்கு ஆயத்தமாக இருந்த
வேளையில் அமைச்சர்
றிஷாத் பதீயுதீன்
அவர்களும் கொழும்பு
மாநகர சபையின்
முன்னாள் ஆணையாளர்
உமர் காமில்
அவர்களும் நானும்
அவரின் வீட்டிற்குச்
சென்றிருந்த போது இம்மாத இறுதிக்குள் வர்த்தமாணி
மூலம் பிரகடணப்படுத்தப்படும்
என எங்களுக்கு
உறுதி மொழி
வழங்கிவிட்டுச் சென்றார்.
சாய்ந்தமருது
மக்கள் கடந்த
பல தசாப்த
காலமாக முஸ்லிம்
காங்கிரஸுக்கு வாக்களித்து வந்துள்ளார்கள்.
அந்த அடிப்படையில்
முஸ்லிம் காங்கிரஸுக்கு
இந்த மக்களின்
நியாயமான கோரிக்கையை
நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது.
இந்த நம்பிக்கை
பள்ளிவாசல் தலைவருக்கும் இருக்கின்றது.
எங்களுக்கும் இருக்கின்றது.
இன்ஷா
அல்லாஹ் எவ்வாறாயினும்
சாய்ந்தமருது மக்களுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம்
பிரகடணப்படுத்தப்படவிருக்கின்றது. அதில் எந்தவித
சந்தேகமும் இல்லை. அதில் முந்திக்கொண்டு பெயர்
வைப்பதில்தான் பிரச்சினை இன்று சிலருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப்
ஹக்கீம் மூலம்
எதிர்வரும் 23 ஆம் திகதி பிரகடணப்படுத்தப்படலாம் என்ற செய்தியை அனுப்பியுள்ளார். இது பள்ளிவாசல் தலைவரால் இங்கு
இப்போது கூறப்பட்டது.
அமைச்சர்
றிஷாத் பதியுதீன்
அவர்கள் அமைச்சர்
பைஸல் முஸ்தபா
22 ஆம் திகதி
இரவு நாடு
திரும்பியதுடன் மறுநாள் காலை அவரிடம் சென்று
இம்மக்களின் கோரிக்கையைத் துரிதப்படுத்துவதற்கு
நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதனை நாம்
சொல்லாமல் இருந்தோம்
ஆனால். சொல்ல
வேண்டிய கடமைப்பாடு
இவ்விடத்தில் எனக்கு ஏற்பட்டுவிட்டது காரணம் என்ன
வென்றால் அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
அவர்கள் செய்தி
அனுப்பியிருக்கிறார்கள்.
இப்படியான
நிலையில் அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் எடுக்கின்ற
முயற்சிகளுக்கு நாம் எல்லோரும் உறுதுணையாக இருக்க
வேண்டும் என்பது
எனது வேண்டுகோள்
அதேநேரம்
ஏனைய கட்சிகளை
நாம் எதிர்ப்பாகப்
பார்க்கவில்லை. இங்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு இம்மக்களின்
வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியும்
இம்மாவட்டத்தின் மூன்று எம்.பிக்களின் தலைவரும்
ஏன் முன்னின்று
தீர்க்க முன்
வரவில்லை என்பது
எனது கேள்வியாகும்.
இவ்வாறு அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் பிரதித்
தலைவர் ஏ.எம்.ஜெமீல்
தெரிவித்தார்.
இச்சந்திப்பில்
பள்ளிவாசல் பேஸ் இமாம் மெளலவி எம்.ஐ.ஆதம்பாவா(
ரஷாதி) பள்ளிவாசல்
செயலாளர் எம்.ஐ.ஏ.மஜீத், அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் சாய்ந்தமருது
அமைப்பாளர் ஏ.எல்.எம்.அன்வர்,
ஏ. ஹிபத்துல்
கரீம், சாய்ந்தமருது
ப.நோ.கூ. சங்கத்தின்
முன்னாள் பொது
முகாமையாளர் ஐ.எல்.ஏ.றாஸீக்
உட்பட பல
பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும் ஆப் பாளிவாசல்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை
அன்பார்ந்த உடன் பிறப்புக்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்
வரலாற்றுத் தவறொன்றின் மூலம் சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகள் விருப்பு வெறுப்புக்கு அப்பால்; இணைத்து கல்முனை மாநகரசபை உருவாக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக முழுகல்முனை தொகுதியையும் ஆளுகைக்கு உட்படுத்தியுள்ளது அது போன்று மற்றுமொரு வரலாற்றுத் தவறொன்றை ஏற்படுத்தாமல் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு மட்டும் வரையறை செய்து ஒரு சபையை ஏற்படுத்த இருப்பது தாங்கள் அறிந்ததே
இதற்குமாறாக ஒருசிலர் கடந்த காலங்களில் முன்னாள் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் அவர்களால் நான்கு சபைகளாக பிரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை முறியடித்து இன்று அதனைதாருங்கள் என்று கேட்பவர்கள் இச்சபையானது பல்வேறு நன்மைகளை சமூகரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் ஏற்படுத்தினாலும் கல்முனையின் வீழ்ச்சிக்கு அடிகோலும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் விதைக்க முற்படுகின்றனர் மறைந்த தலைவர் மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்கள் உட்பட சகல முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களும் சாய்ந்தமருது பிரதேச மக்களின் கோரிக்கையான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பவற்றை பெற்றுக்கொடுக்க பின்னிற்கவில்லை.
குறிப்பாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தை உருவாக்கியபோது சாய்ந்தமருதின் வடக்கு எல்லை குறைக்கப்பட்டது இந்த குறைக்கப்பட்ட எல்லையோடுதான் பிரதேச செயலகத்தின் எல்லை வரையறுக்கப்பட்டது.
இதன் போது நாங்கள் கொதித்தெழவில்லை எமது பெருந்தன்மையான விட்டுக்கொடுப்புக்கு சிறந்த உதாரணமாகும்
எமது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்கப்படுவதன் மூலம் எந்தவொரு பிரதேசமோ, இனமோ குறிப்பாக கல்முனை மாநகரமோ பாதிக்கப்படமாட்டாது என்று உறுதியாகவும்,அறிவு பூர்வமாகவும் அறிந்திருந்தும் கூட இவர்கள் இவற்றைத் திரிபுபடுத்தி உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தையும், தடுத்து நிறுத்துவதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வது இவ்வூரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிருப்தியையும் ஆழ்ந்த மனவேதனையையும் ஏற்படுத்தும் ஒரு செயலாகும்.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளுராட்சி சபைக்குரிய முறையான விண்ணப்பத்தை இந்தப்பிரதேசத்தில் பெரும்பாண்மை வாக்குப்பலத்தைப் பெற்ற கட்சியின் தலைவர; ஊடாக எமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் மாநகர சபையின் உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட குழுவினர் அப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சராகவிருந்த தற்போதைய சபாநாயகர; கௌரவ கரு ஜயசூரிய அவர்களிடம் கையளித்தது மட்டுமல்லாது அதற்கான பிரதேச,மாவட்ட செயலாளரின் சிபாரிசுகளையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அத்துடன் எமது முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தீர்மானமாக எடுக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக கடந்த பொதுத்தேரதலின்போது ஸ்ரீ.ல.மு.கா இன் தலைவர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஆகியோர் தலைமையில் கல்முனையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் இந்த சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை தருவதாக தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டது.
மேலும் கௌரவ அ.இ.ம.கா கட்சியின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் தற்போதைய மாகாண உள்ளுராட்சி அமைச்சர் அவர்களை விசேடமாக அழைத்து வரப்பட்டு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்டது
மட்டுமல்லாமல் பிரகடனமும் செய்யப்பட உள்ள இவ்வாறன நிலையில் சுமார் 30,000 மக்களை கொண்டதும் 20,000 க்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்டதுமான ஒரு பிரதேசத்திற்கான சமூக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய ஒரு தனியான உள்ளுராட்சி வழங்கப்படவுள்ள இச் சந்தர்ப்பத்தில் குறுகிய நோக்கங்களுடன் தடுக்க முனைவது அல்லது அதற்கான முட்டுக்கட்டை போட நினைப்பது இப்பிரதேச மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற செயற்பாடவே கருத முடியும்.
எனவே இவ்வாறன எதிர் செயற்பாட்டாளர்கள் உடனடியாக தங்களை திருத்திக் கொண்டு யதார்த்தத்தின் பக்கம் திரும்புவது சிறந்தது.
பின் விளைவுகளையும் தாக்கங்களையும் ஒரு கணம் சிந்தித்து இவ்வூர் மக்களின் அபிலாசைகள், விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து எதிர்வரும் காலங்களில் மலரவிருக்கின்ற இவ் உள்ளுராட்சி சபை மலர ஒன்றிணைவோம்.
எமது நோக்கம் கல்முனையின் அபிவிருத்தி, சாய்ந்தமருதின் அபிவிருத்தி, ஒட்டு மொத்த கல்முனை தொகுதியின் அபிவிருத்தி மற்றும் பிரதேச ஓற்றுமையுமே.
தலைவர்
செயலாளர்
ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் சாய்ந்தமருது
0 comments:
Post a Comment