மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் அபிவிருத்தி
விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையக்
கட்டிடத் தொகுதியினைத் திறந்து வைப்பதற்காக
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு விஜயம்
கிழக்கு
மாகாண விவாசய அமைச்சர் துரைராசசிங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
எதிர்வரும் 31ஆம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு
பிரதேசத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
கிழக்கு
மாகாண விவசாய
அமைச்சினால் கரடியனாறு பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையக்
கட்டிடத் தொகுதியினைத்
திறந்து வைப்பதற்காக
குறித்த விஜயத்தினை
மேற்கொள்ளவுள்ளார்.
ஐரோப்பிய
ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்திகளுக்கான
செயற்திட்டத்தின் மூலமான 98 மில்லியன் ரூபா நிதியில்,
உலக உணவு
விவசாய ஸ்தாபனத்தின்
மூலம் குறித்த
பயிற்சி நிலையத்தின்
நிர்மாணிப்பு பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்
பின்னர் கிழக்கு
மாகாணத்தில் ஏற்பட்ட மாற்றத்தினூடாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பும் மாகாண ஆட்சியில் பங்காளிகளாக உள்ளீர்க்கப்பட்டு
விவசாய அமைச்சுப்
பொறுப்பினையும் பெற்றது.
தற்போது
அமைக்கப்பட்டுள்ள குறித்த சேவைக்கால பயிற்சி நிலையத்தில்
நிர்வாகக் கட்டிடம்,
விரிவுரை மண்டபம்,
சமையலறை உட்பட
உணவு உட்கொள்ளும்
மண்டபம், நூல்
நிலையம், ஆண்,பெண் இருபாலருமாக
40 பேர் தங்கி
நிற்கக் கூடிய
விதத்தில் அமைக்கப்பட்ட
விடுதி வசதி,
சுமார் 250 பேர் வரை உள்வாங்கக் கூடிய
நவீன கேட்போர்
கூடம் போன்றன
அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த
கட்டிடத் திறப்பு
விழாவிற்கு கிழக்கு மாகாண விவாசய அமைச்சர்
துரைராசசிங்கத்தின் அழைப்பின் பேரில்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன கலந்து
கொள்ளவுள்ளார்.
0 comments:
Post a Comment