நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்ஸ, அமைச்சுக்கு சென்று ஊழியர்கள் சந்தித்து உரையாடியதுடன் விடைபெற்றுக்கொண்டார்.
அத்துடன் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் அமைச்சில் இருந்த தமது ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
அமைச்சரவை கட்டுப்பாடு மற்றும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதாகவும் கடந்த அரசாங்கத்தில் நடந்த ஊழல்கள், குற்றங்கள், கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன். விளக்கமளித்து, திருத்திக்கொள்ள நான்கு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
எனினும் அவர் விளக்கமளிக்கவில்லை என்பதுடன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தவில்லை.
இதனால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, ஜனாதிபதிக்கு அறிவித்திருந்ததுடன் அதனை ஏற்ற ஜனாதிபதி விஜேதாச ராஜபக்ஸவை அமைஸசர் பதவியில் இருந்து நீக்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment