உள்ளுராட்சி எல்லை நிர்ணயம்
வட்டார முறையில் காணப்படும் பிரச்சினைகள்
பா.திருஞானம்

மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் 24.08.2017 அன்று                  பாராளுமன்றத்தில்  உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆற்றிய உரை

உள்ளுராட்சி தேர்தலில் வட்டார¸ விகிதாசார முறையை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையை நானும்¸ நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மலையக மக்கள் முன்னணியும் வரவேற்கின்றதுவட்டார 70மூ முறைக்கும்¸ 30மூ விகிதாசார முறையிலும் என்ற நிலை¸ 60மூ வட்டார முறைக்கும்¸ 40மூ விகிதாசார முறைக்கு மாற்றப்பட்டுள்ளமை ஒரு படி முன்னேற்றகரமானது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அடிப்படையில் உள்ளுராட்சி தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட பிரதான விடயங்களாவன. வட்டாரங்களுக்கான எல்லை நிர்ணயம்¸ அதில் கடைப்பிடிக்க வேண்டிய அளவு கோள்களில் இனச்செறிவு¸ இன தனித்துவம் பேணப்பட்டு¸ வட்டார முறை ஏற்படுத்தப்படாமை¸ மலையக தமிழ் மக்கள்¸ முஸ்லிம் மக்கள் போன்ற சிறுபான்மையினரை அவர்கள் சிறுபான்மையாக உள்ள பகுதிகளில் பெரிதும் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டம்¸ முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டங்களை தவிர்த்து மலையக மக்களும் முஸ்லிம் மக்களும் பரவலாக வாழும் மாவட்டங்களை பெரிதும் பாதிக்கின்றது. குறிப்பாக நுவரெலியாவில் 31 மலையக தமிழ் மக்களே வாழ்கின்றனர். ஆனால் 3பகுதியினர் வெளி மாவட்டங்களிலேயே குறிப்பாக பதுளை¸ கண்டி¸ இரத்தினபுரி¸ கேகாலை¸ களுத்துரை¸ கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே வாழ்கின்றனர். ஆகவே இந்த நிலைமை சரியாக புரிந்துக் கொள்ளப்பட்டு அதற்கேற்ப வட்டாரங்கள் எல்லை நிர்ணயம் செய்திருக்கப்பட வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் அப்படி நடக்கவில்லை.

மேலும் இங்கு எல்லை நிர்ணயம் என்பது தற்போதிருக்கும் 335 உள்ளுராட்சி நிறுவனங்களுக்குள் வட்டாரங்கள் பிரிப்பதையே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதில் மிகப் பிரதான குறைப்பாடும்¸ பாதிப்பும் மலையக தமிழ் மக்கள் இலட்சம் பேர் வாழ்ந்தாலும்¸ இரண்டு இலட்சம் ஜனத்தொகையை கொண்ட நுவரெலியா பிரதேச சபையிலும்¸ இரண்டு இலட்சம் ஜனத்தொகையை கொண்ட அம்பகமூவ பிரதேச சபைகளில் மாத்திரம் தான் வட்டரங்கள் பிரிக்க கூடிய வாய்ப்பு இருக்கின்றது. எனவே வட்டாரம் பிரிப்பது மாத்திரம் மலையக மக்களை பொறுத்தவரை பயன் தரப்போவதில்லை. அதற்கு முன்னோடியாக குறைந்தது நுவரெலியா மாவட்டதிலாவது புதிய பிரதேச சபைகள்¸ புதிய உள்ளுராட்சி நிறுவனங்கள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அம்பகமூவ 50.000 ஜனத்தொகை அடிப்படையில் நான்கு பிரதேச சபைகளாகவும்¸ நுவரெலியா பிரதேச சபை 50.000 ஜனத்தொகை படி 04 பிரதேச சபைகளாகவும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2011 ஆம் ஆண்டு ஜனத்தொகை கணிப்பீடு¸ நாடு பரந்த அளவு முற்றுப் பெற்றுள்ள நிலையில் இந்த விடயத்தில் பிரதேச செயலகங்களை உருவாக்கும் அதிகாரம் உள்நாட்டு அலுவல்கள் பொது நிருவாக அமைச்சுக்கும்¸ உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைகள்¸ உள்ளுராட்சி நிறுவனங்கள் அமைச்சுக்கும் இருக்கும் நிலையில் இது தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி சமம்பந்தப்பட்ட¸ இரு அமைச்சர்களையும் பல முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி¸ கொள்கை ரீதியாக ஒத்துக் கொண்ட நிலையில் ஏன் உள்ளுராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்படவில்லை. உள்ளுராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணயம் செய்து அதனை அதிகரித்ததன் பின்னரே அந்த உள்ளுராட்சி நிறுவனங்களுக்குள் வட்டாரம் ஒதுக்கப்பட வேண்டும். இதனை விடுத்து நுவரெலியா¸ அம்பகமூவ போன்ற பகுதிகளில் வட்டாரங்களை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் இம்மக்களை உள்ளுர் அதிகார சபைகளின்¸ அரசியல் தீர்மானம் எடுக்கும் செயல் முறையில் சம்பந்தப்படுத்த முடியாது.
நுவரெலியா¸ ஹங்குராங்கெத்த பிரதேச சபைகளில் கிட்டத்தட்ட 80.000 மக்களுக்கு 131 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 32 வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கிராம சேவகர் பிரிவுகள் 1000 மக்களுக்கு குறைந்த ஜனத்தொகையை கொண்டது. ஆனால் அம்பகமூவ¸ நுவரெலியாவில் தலா 2 இலட்சம் மக்கள் தொகை காணப்படுகின்றது. இங்கு நுவரெலியாவில் 72 கிராம அலுவலர் பிரிவுகளும்¸ அம்பகமூவவில் 67 கிராம அலுவலர் பிரிவுகளும் காணப்படுகின்றன. இங்கு இரண்டு பிரதேச சபைகளிலும்¸ தலா 35 வட்டாரங்களே எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இவ்விதமான மலைக்கும் மடுவுக்குமான பாரபட்சத்தை சுட்டிக்காட்க்ககூடியதாக உள்ளது.

மேலும் அம்பகமூவவில் கேக்கசோல்ட் கிராம அலுவலர் பிரிவு 15 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டது. இது கோமரன் கடவல¸ லகுகல போன்ற பிரதேச செயலகங்கள்¸ பிரதேச சபைகளில் காணப்படும் ஜனத்தொகைக்கு நிகரானது. இந்த பாகுபாட்டை காட்ட சில கிராம அலுவலர் பிரிவுகளின் ஜனத்தொகையை கீழே குறிப்பிடுகின்றேன்.

கிராம அலுவலர் பிரிவு                 ஜனத்தொகை
கேக்கசோல்ட்                                     15000    
ணராஜா                                            10000
ஹோலரிம்                                          12000

ஆகவே இன்று தேசிய ரீதியாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவும்¸ உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு தேசிய ரீதியிலா எல்லை நிரிணய குழுவும் இம்மாவட்ட ரீதியான எல்லை நிர்ணய குழுவும் இணைந்து நாடு பரந்தளவில் செயல்பட்டு¸ சிறுபான்மை இனங்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் இனி எப்போது நியாயம் கிடைக்க போகின்றது
தற்போதைய நிலையில்  இந்த உள்ளுராட்சி தேரிதல் சீர்த்திருத்தம் ஐக்கிய தேசிய கட்சி¸ ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி¸ கூட்டு எதிர்கட்சி¸ தமிழர் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தமக்கு பாதிப்பு இல்லாத நிலையில் இதனை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுகிறது. இதில் வடகிழக்கில் குறிப்பாக கூட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படபோவதில்லை. அதில் கூடுதலாக பாதிக்கப்பட போகின்றவர்கள் மலையக தமிழ் மக்களும்¸ முஸ்லிம் மக்களும் தான் மிக மோசமாக பாதிக்கப்பட போகின்றனர். நுவரெலியா அம்பாறை மாவட்டங்களில் வட்டார முறையின் கீழ் ஓரளவு நண்மை கிடைத்தாலும் பதுளை¸ கண்டி¸ இரத்தினபுரி¸ கேகாலை¸ களுத்துரை போன்ற மாவட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கு வட்டார முறையும்¸ விகிதாசார முறையும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையலாம்.
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் உத்தேச வட்டாரங்களில் தமிழ் மக்களை இணைத்து வட்டாரங்களில் சிறுபான்மையாக்குவது உதாரணமாக
1. ருவன்புர பகுதியோடு வெளிஓயாசெனன் போன்ற பகுதிகளை இணைத்தல்.
2. நோட்டன் பகுதியோடு வெயிஓயா பகுதியினை இணைத்தல்
தமிழ் மக்கள் கூடுதலாக வாழும் கிராம அலுவலர் பிரிவுகளை இரண்டு¸ மூன்றாக பிரித்து சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியுடன் இணைத்தல்

1948 ஆம் ஆண்டு எமது பிரஜா உரிமை பறிக்கப்பட்டு¸ 1977 ஆம் ஆண்டு வரை ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கூட¸ இல்லாது பாதிக்கப்பட்ட நாம் இன்று நடைபெறும்¸ உள்ளுராட்சி தேர்தல் சீர்த்திருத்தங்களிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. ஏமக்கு உள்ளுராட்சி தேர்தல்களில் எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாவிட்டால் ¸ எமக்கு வாக்குரிமை இருந்து அதனால் என்ன பிரயோசனம்? ஆகவே புதிய உள்ளுராட்சி தேர்தல் முறையில் ஏற்படுத்தப்படும் வட்டார முறை எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து எம்மை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே முடிவாக உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்பு உள்ளுராட்சி அமைச்சரும்¸ பொது நிருவாக அமைச்சரும் இணைந்து உள்ளுராட்சி நிறுவனங்களையும்¸ பிரதேச செயலகங்களையும் உருவாக்கி அதன் அடிப்படையில் வட்டாரங்களை உருவாக்கி தமிழ் மக்களுக்கு உள்ளுராட்சி வட்டார முறையில் நீதி கிடைக்க வேண்டும்.

இது இவ்வாறு இருந்த போதும் கௌரவ ஜனாதிபதி¸ மற்றும் கௌரவ பிரதம மந்திரி அவர்களின் முயற்சியால் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கைகளுக்கு இணங்க கௌரவ பைசர் முஸ்தப்பா  மூலம் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 05 பிரதேச சபைகளை 12 பிரதேச சபைகளாக அதாவது அம்பகமுவ – 03¸ நுவரெலியா – 03¸ கொத்மலை – 02¸ ஹங்குரங்கெத்த – 02¸ வலப்பனை – 02 முறையாக பிரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கத்தினால் உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளதற்கமைய¸ இன்று நடக்கும் வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளோம். இதன் மூலமாக மலையக மக்களுக்கு பல வித நண்மைகள் ஏற்பட இடமுண்டு. இதற்காக கௌரவ ஜனாதிபதி¸ கௌரவ பிரதம மந்திரி மற்றும் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்து வரும் மாற்றங்களுக்கு இவர்களுடைய பூரண ஆதரவு கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றோம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top