சாய்ந்தமருது நகரசபை
சம்சுதீன் யூனுஸ்லெவ்வையின் பதிவு
சகோதரர் Dr நஜிமுதீன் அவர்களே நீங்கள் கடந்த புதன்கிழமை சாய்ந்தமருது நகரசபை எனும் தலைப்பில் முகப்புத்தகத்தில் ஒரு கட்டுரையினை வெளியிட்டிருந்தீர்கள் அதில்
முற்றுமுழுதாக உங்கள் தனிப்பட்ட தொழில்சார்ந்த மனக்கசப்பினை வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைத்ததும் இரண்டு ஊர் மக்களையும் மேலும் மேலும் காயப்படுத்தும் ஒரு செயலினை தோற்றுவித்துள்ளீர்கள்.
சாய்ந்தமருது மக்களுக்கு அவர்களின் ஊரை வளப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கு தனியான உள்ளுராட்ச்சி சபைதான் தீர்வு என்றிருந்தால் அது நிச்சயமாக நடக்கவேண்டும் அதேநேரம் உண்மையிலேயே கல்முனை மக்கள்தான் உங்களுக்கு நடந்த அநீதிக்கும் சாய்ந்தமருது மக்களுக்கு இதுவரைக்கும் நடந்ததாக கூறப்படும் புறக்கணிப்புக்கும் காரணம் என்று உங்களால் கூறமுடியுமா?
அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் ஏற்படுத்தப்படும் சித்துவிளையாட்டுகளுக்கு கல்முனைவாள் மக்களை நீங்கள் கொடியவர்கள் என்று வர்ணிக்குமளவுக்கு உங்கள் முகப்புத்தகத்திலான நீண்ட கட்டுரை அமைந்துள்ளது.
சாய்ந்தமருது ஊரில் வாழும் எல்லோரும் சாய்ந்தமருதும் கிடையாது கல்முனைக்குடியில் வாழும் எல்லோரும் கல்முனைக்குடியும் கிடையாது. கல்முனைக்குடி ஆண்கள் சாய்ந்தமருதில் திருமணம் செய்திருக்கின்றார்கள் அவர்களுக்கு சாய்ந்தமருதில் பிள்ளைகள் பிறந்து வாழ்கின்றார்கள் அதேபோன்று சாய்ந்தமருது ஆண்கள் கல்முனைக்குடியில் திருமணம் செய்திருக்கின்றார்கள் அவர்களுக்கு கல்முனைக்குடியில் பிள்ளைகள் பிறந்து வாழ்கின்றார்கள். ஏன் நீங்களும்தான் கல்முனைக்குடியில் திருமணம் செய்திருக்கிறீர்கள் உங்களுக்கும் கல்முனைக்குடி தாய்க்கும் பிள்ளைகள் பிறந்திருக்கின்றார்கள் அவர்கள் சாய்ந்தமருத்துக்கு மாத்திரம் எப்படி சொந்தமாக்கமுடியும்? உங்கள் கூற்று சரியென்றால் உங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சேர்த்து ஏசுகிறீர்களா? அல்லது அவர்களையும் குற்றம் சாட்டுகிறீர்களா? யாரோ உங்களுக்கு பண்ணிய பாவத்துக்கு உங்கள் மனைவியும் பிள்ளைகளும் கல்முனைக்குடி என்ற காரணத்துக்காக எப்படி பொறுப்பெடுக்கமுடியும்? அப்படிப்பார்த்தால் நீங்களும்தான் பிரிவினைவாதி காரணம் உங்கள் மனைவி பிறந்த மண்ணில் நீங்கள் இருவரும் திருமணம் செய்ததற்கு பிற்பாடு நீங்கள் ஒருபோதும் உங்கள் மனைவியை வாழவைத்தது கிடையாது.
1977 ஆம் ஆண்டிலிருந்து கல்முனைக்குடியின் அநியாய வரலாறு பேசும் நீங்கள் அதற்க்கு பிற்பாடுதான் கல்முனைக்குடியில் திருமணம் செய்தீர்கள்?
நீங்கள் வசைபாடுவது உங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் என்பதனை மறந்துவிடாதீர்கள் அதேநேரம் உங்களுக்கு நடந்த பிரச்சினை ஊர் சார்ந்த பிரச்சினையல்ல அது உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை இதை வரலாறாக எழுதி மேலும்மேலும் ஊர்பிரச்சினையாக்கவேண்டாம் இதுபோன்று பல ஊர்களில் பலருக்கு நடந்திருக்கின்றது.
தனியான உள்ளூராட்சி சபை என்பது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அது சிலகாலங்களில் இரு ஊர் மக்களுக்கும் பழகிவிடும் ஆனால் ஒரே தாய்வயிற்று பிள்ளைகளான இரு ஊர்மக்களினதும் மனநிலை உங்களைப்போன்ற படித்தவர்கள் விதைக்கும் நச்சு விதைகளால் வாழ்நாழ்ப்பூராகவும் நஞ்சிஊட்டப்பட்டுவிடுவார்கள்.
மேலும் உங்களை கல்முனைக்குடியிலிருந்தோ சாய்ந்தமருதிலிருந்தோ யாரும் வெளிநாட்டுக்கு துரத்தவில்லை மாறாக மேலதிக வருமானத்துக்காக நீங்கள்தான் வெளிநாடு போயுள்ளீர்கள் அதை மனதில் வைத்து எழுதுங்கள்.
உங்களை உலகமே திரும்பி பார்க்கும் முகப்புத்தகத்தில் பிறந்த ஊரை சாய்ந்தமருது என்று குறிப்பிட வெட்கப்படும் நீங்கள் ஊர்ப்பற்று பேசுகிறீர்கள்.
என்னைப்பொறுத்தவரைக்கும் எமது சாய்ந்தமருது சகோதரர்கள் விரும்பும் சாய்ந்தமருத்துக்கான தனியான உள்ளூராட்சி சபை கிடைக்கப்பெற்றால் அதனால் சாய்ந்தமருது ஊருக்கும் மக்களுக்கும் என்ன நன்மைகள் உள்ளன என்பதைத்தான் உங்களைப்போன்ற படித்த புத்திஜீவிகள் எழுதவேண்டும் அதைவிட்டுவிட்டு உங்களுடைய சொந்த பிரச்சினையை சமூகப்பிரச்சினையுடன் முடிச்சிப்போட்டுக்காட்டுவது இரண்டு ஊர் மக்களையும் மூட்டிவிடும் கொடிய செயலாகும்.
0 comments:
Post a Comment