முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் கடுமையாக சுகவீனமுற்றுள்ள நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் நேரடி அழைப்பில் அரசியலுக்கு வந்த அஸ்வர் ஹாஜியார், ஆரம்பத்தில் முஸ்லிம் கலாச்சார இராஜாங்க அமைச்சராக செயற்பட்டிருந்தார்.
அக்காலத்திலேயே ஏழ்மையில் வாடிய முஸ்லிம் கலைஞர்களைத் தேடிப்பிடித்து வாழ்வோரை வாழ்த்துவோம் என்ற பெயரில் பணமுடிப்பும் பட்டங்களும் வழங்கி கலைஞர்களுக்கு சேவையாற்றியிருந்தார்.
அதன் பின்னர் 2002-2004ஆம் ஆண்டு ரணில் ஆட்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சராக செயற்பட்டிருந்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சுதந்திரக் கட்சிக்குத் தாவிய அஸ்வர் ஹாஜியார் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் ஊடகத்துறை குறைகேள் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் 2010-2015 வரையான நாடாளுமன்ற பதவிக்காலத்தில் சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதன் பின்னர் தொடர்ந்தும் மஹிந்த தரப்பு ஆதரவாளராகவும் செயற்படுகின்றார்.
இந்நிலையில் தற்போது கடுமையாக சுகவீனமுற்றுள்ள அஸ்வர் ஹாஜியாரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸச நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment