தொடர் தோல்வி...
இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கோபத்தில்
மைதானத்துக்குள் தண்ணீர் போத்தல்களை எறிந்து
தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்
இந்தியா
- இலங்கை அணிகள்
மோதும் ஒரு
நாள் தொடர்
இலங்கையில் நடந்து வருகிறது. முதல் இரண்டுப்
போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி கண்டி பல்லேகலேவில் நேற்று நடந்தது. டாஸ்வென்ற
இலங்கை அணி
பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த
அணியின் தொடக்க
வீரர்கள் அடுத்தடுத்து
வெளியேற, லஹிரு
திருமானே மட்டும்
நிலைத்து நின்று
ஆடினார். திருமானே
80 ஓட்டங்களில்
வெளியேறினார். இதனால், இலங்கை அணி 50 ஓவர்கள்
முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு
217 ஓடங்ககள் எடுத்தது.
அதிகபட்சமாக பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பாண்ட்யா, அக்சர்
பட்டேல், கேதர்
ஜாதவ் ஆகியோர்
தலா ஒரு
விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து
களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை
இழந்து திணறியது.
ஒருகட்டத்தில், 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை
இழந்தது. இதைத்தொடர்ந்து,
ரோஹித் ஷர்மா
தோனி இணை
நிதானமாக ஆடி
ரன் குவிப்பில்
ஈடுபட்டனர். ரோஹித் ஷர்மா சதம் அடித்து
அசத்த, தோனி
அரை சதம் அடித்தார்.
வெற்றியின்
விளிம்பில் இந்தியா இருந்தபோது, இலங்கை ரசிகர்கள்
அதிருப்தியில் தண்ணீர் போத்தல்களை மைதானத்துக்குள் வீசினர். அதேபோல்,
தோல்வியை ஏற்க
முடியாமல் ஆரவாரம்
செய்தனர். இதனால்,
போட்டி சற்று
நேரத்துக்கு நிறுத்தப்பட்டது. இதனிடையே,
இலங்கை ரசிகர்கள்
தொடர்ந்து தண்ணீர்
போத்தல்களை மைதானத்துக்குள் வீசினர். இதையடுத்து,
தோனி மைதானத்திலேயே
அசந்து படுத்து
விட்டார். இதன்
காரணமாக, இலங்கை
ரசிகர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும்
நெட்டிசன்கள், தோனியின் ஃபோட்டோவையும் ட்ரெண்டு ஆக்கினர்.
0 comments:
Post a Comment