புலனாய்வு
பிரிவு அதிகாரியிடத்தில்
தங்கத்தை கையளித்த
வெளிநாட்டு பயணி யார்?
தீவிர விசாரணை
புலனாய்வு
பிரிவு அதிகாரியிடத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவரே குறித்த தங்கத்தை கையளித்துக்களதாக
விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் குறித்த வெளிநாட்டு பிரயாணி யார் என்பது குறித்து
தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இரண்டு கிலோ
கிராம் நிறையுடைய
தங்க ஆபரணங்களை
சட்ட விரோதமான
முறையில் கட்டுநாயக்க
விமான நிலையத்தில்
இருந்து வெளியே
கொண்டு செல்வதற்கு
முயற்சித்த போது புலனாய்வு பிரிவு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ
புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரே
இவ்வாறு சுங்கப்
பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு
தெரிவித்துள்ளது.
இவர்
தனது முழங்காலில்
கட்டிட்டு செல்வது
போல தங்கத்தை
மறைத்து செல்ல
முற்பட்ட போதே
கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க
விமான நிலையத்திற்கு
நேற்று முன்தினம்
இரவு 09.15 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த
யூ.எல்
360 இலக்க விமானம்
மூலம் குறித்த
தங்க ஆபரணங்கள்
கொண்டு வரப்பட்டுள்ளன.
அவற்றை
சூட்சுமமான முறையில் விமான நிலையத்தில் இருந்து
வெளியே அனுப்ப
புலனாய்வுப் பிரிவு அதிகாரி முயற்சித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில்ஜயரத்ன
கூறினார்.
இவர்
பொலிஸாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டதையிட்டு முன்னெடுக்கப்பட்ட
விசாரணைகளின் போது தங்க ஆபரணங்களின் பெறுமதி
சுமார் 9.1 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.
இவரிடத்திலிருந்து
2 கிலோ 35 கிராம்
தங்கம் கைபற்றப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து
சுங்க ஊடகப்
பேச்சாளர் மேலும்
குறிப்பிடுகையில்,
இது
போன்று விமான
நிலையத்தில் பணியாற்றும் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள்
சிலர் தொடர்ந்தும்
செயற்பட்டு வருகின்றார்கள்.
எனவே
இனி வரும்
நாட்டகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில்
அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.
அதேநேரம்
மேற்படி புலனாய்வு
பிரிவு அதிகாரியிடத்தில்
வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவரே
குறித்த தங்கத்தை
கையளித்துக்களதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள
நிலையில் குறித்த
வெளிநாட்டு பிரயாணி யார் என்பது குறித்தும்
தீவிர விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய
பொலிஸார் அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment