பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்

காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிடம் திறப்பு

காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ நேற்று திறந்து வைத்தார்.
 இந்நிகழ்வின் அமைச்சர் ரஊப் ஹக்கீம் ,அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கலபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய கட்டடத்தின் பெயர் படிகத்தை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.
மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லா முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த போது ஒதுக்கப்பட்ட 42 மில்லியன் ரூபாய்கள் செலவில் இந்த நகரசபைக்கான கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது.

காத்தான்குடி நகரசபைக்கான கட்டடம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அயராத முயற்சியால் நிர்மானிக்கப்பட்டதாக, விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கட்டடம் எனது நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்டது. இதற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் குறித்த கட்டடத்தை, தான் கட்டியதாக முதலமைச்சர், பிரதமரை அழைத்து வந்து திறப்பு விழாச் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதில்லையெனவும் தெரிவித்து இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இத்திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top