தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியாமணி. 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.அது ஒரு கனாக்காலம், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.
33 வயதாகும் பிரியாமணிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒரு வருடமாக ரகசியமாக காதலித்து வந்தார்கள்.
பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
பிரியாமணி-முஸ்தபாராஜ் திருமணம் பெங்களூருவில் நேற்று எளிய முறையில் நடந்தது. அங்கு சிவாஜி நகரில் உள்ள பதிவு துறை அலுவலகத்துக்கு சென்று இருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று பிரியாமணி அறிவித்து உள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.