கட்டணம் செலுத்தியும்
40 பேருக்கு
ஹஜ் செய்ய
முடியாத நிலை
இலங்கையிலிருந்து
இம்முறை ஹஜ்
கடமைக்காக
பயணிக்கவிருந்த 35 யாத்திரிகர்கள் புனித
மக்கா நகருக்கு
செல்ல முடியாமல்
ஏமாற்றமடைந்துள்ள அதேவேளை, 5 யாத்திரிகர்கள் அங்கு சென்று
கடமைகளில் பங்குபற்ற
முடியாமல் திரும்பியுள்ளனர்.
தமக்குரிய
வீசா நடைமுறைகள்
அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்ட
நிலையில் விமான
டிக்கட் பெற்றுக்கொடுக்க
முடியாமல் போன
காரணமாகவே இந்த
நிலைமை ஏற்பட்டுள்ளதாக
பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முகவர்
நிறுவனமொன்று இவர்களுக்கு ஹஜ் யாத்திரிகைக்கான ஏற்பாடுகளை
செய்து பணத்தை
பெற்றுக்கொண்ட நிலையில் குறித்த 35 யாத்திரிகர்களுக்கான விமான டிக்கட்டுக்களை ஏற்பாடு செய்ய
தவறியுள்ளனர்.
ஹஜ்
யாத்திரிகைக்கான இறுதி விமானம் இன்று புறப்பட்டு
சென்ற நிலையில்
குறித்த 35 பேருக்கும் இம்முறை ஹஜ் கிரிகைகளை
நிறைவேற்ற முடியாமல்
போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,
மக்கா சென்ற
5 யாத்திரிகர்கள் உரிய நேரத்துக்கு சென்றடைய தவறியதால்
கிரிகைகளில் பங்குபற்ற முடியாமல் திரும்பியுள்ளனர்.
இம்முறை
ஹஜ்ஜுக்காக 2,840 கோட்டாக்கள் கிடைத்த நிலையில் இறுதித்
தருவாயில் மீண்டும்
600 கோட்டாக்கள் மேலதிகமாக கிடைத்தது. மேலதிகமாக வழங்கப்பட்ட
600 கோட்டாக்களில் 40 கோட்டாக்களை பெற்றுக்கொண்டவர்களே
இந்த சிக்கல்
நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட
35 பேருக்கும் தமது நிதியை மீள பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்கப்படும்
என முஸ்லிம்
சமய பண்பாட்டலுவல்கள்
திணைக்கள தகவல்கள்
தெரிவிக்கின்றன
0 comments:
Post a Comment