நீதியமைச்சராக தலதாஅத்துகோரளை?
அமைச்சர்
விஜயதாஸ ராஜபக்ஸவின் நீதி
மற்றும் புத்தசாசன
அமைச்சுப் பதவிகளில்,
நீதியமைச்சின் பொறுப்புகள் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அமைச்சர் தலதா
அத்துகோரளைக்கு வழங்கப்படவுள்ளதாக, அரச வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
எனினும்,
புத்தசாசன அமைச்சுப்
பதவியை அவரிடமே
கையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், அந்த
கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம்
தெரிவிக்கவில்லையென, சிங்கள ஊடகமொன்று
செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகையால்,
நீதியமைச்சு மட்டுமின்றி, புத்தசாசன அமைச்சும் கைமாறுவதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறியமுடிகிறது.
இதேவேளை, நாட்டில்
நாளைய தினம்
பெண் நீதியமைச்சர்
ஒருவர் இருப்பார்
என பிரதி
அமைச்சரும் சட்டத்தரணியுமான அஜித் பீ. பெரேரா
தெரிவித்துள்ளார்.
நேற்றைய
தினம் நாடாளுமன்றத்தில்
இடம்பெற்ற விவாதங்களை
முடித்து விட்டு
வெளியேறிய பிரதி
அமைச்சரிடம், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப்
பதிலளித்துப் பேசிய அவர், நாட்டில் நாளைய
தினம் பெண்
நீதியமைச்சர் ஒருவர் இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர்
விஜேதாச ராஜபக்ஸவிற்குப் பதிலாக
ஒரு பெண்
நாடாளுமன்ற உறுப்பினர் அவரின் நீதியமைச்சர் பதவிக்கு
நியமிக்கப்படலாம் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில்
பிரதி அமைச்சரின்
கருத்துப்படி அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள்
இருப்பதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment