பால்மா பொதிகளின் விலை உயர்வு!
பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
400 கிராம் பால்மா பொதியின் விலை 20 ரூhபாயாலும், 1 கிலோகிராம் பால்மா பொதியின் விலை 50 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியுடன் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதன்படி 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment