வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக
யாழ்.மாவட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
உருவ பொம்மையும் எரிப்பு

திருகோணமலை  சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் அண்மையில் எழுந்த அபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை ஆதரித்து வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக யாழ். மாவட்ட முஸ்லிம்கள் இன்று 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் யாழ். நாவாந்துறை நான்கு சந்தியிலுள்ள ஜும்ஆ பள்ளி வாசலில் இடம்பெற்ற ஜும்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிரான தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
அபாயா ஆடை விவகாரத்தில் இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளை  மதிக்காமல் அஸ்மின்  தெரிவித்துவரும் கருத்துக்களை அவர் நிறுத்திக்கொள்வதுடன் இதற்காக அவர்  பகிரங்கமாக  முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அயூப் அஸ்மிநுடைய உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச்சென்றதுடன் நான்கு சந்தி பகுதியில் அதனை தீயிட்டு கொழுத்தி தங்கள் எதிர்ப்பையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top