பொன்சேகாவின் பதவியைக் கெடுத்த
பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள்
அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவிப்பு
'சட்டம் ஒழுங்கு அமைச்சராக இராணுவ அதிகாரிகளை நியமிக்க வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்கள். இதன்காரணமாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கவில்லை" என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்
நேற்றுமுன்தினம்
நடந்த அமைச்சரவை
மாற்றத்தின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சர்
பதவி சரத்
பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும்,
அவருக்கு அந்தப்
பதவி வழங்கப்படாதமை
ஐதேகவினர் பலருக்கும்
ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சரத்
பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க கோரியதாகவும், ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நிராகரித்து
விட்டார் என்றும்
சரத் பொன்சேகா
கூறியுள்ளார்.
இந்த
நிலையில் இதுபற்றிக்
கருத்து வெளியிட்டுள்ள
அமைச்சர் நவீன்
திசநாயக்க, இராணுவ அதிகாரி ஒருவரை இந்தப்
பதவிக்கு நியமிக்க
வேண்டாம் என்று
குறிப்பிட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்
இதன்காரணமாகவே,
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, அமைச்சர்
பீல்ட் மார்சல்
சரத் பொன்சேகாவுக்கு
சட்டம் ஒழுங்கு
அமைச்சுப் பதவி
வழங்கவில்லை" என பெருந்தோட்டக்
கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment