சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள
நுரச்சோலை வீடுகளைக் கோரி
சுனாமியைச் சந்திக்காதவர்களுக்காக
விண்ணப்பம்
நுரச்சோலையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என நிர்மாணிக்கப்பட்டுள்ள
வீடுகளைக் கோரி சம்மாந்துறை, புளக் - ஜே 3 என்ற விலாசத்திலுள்ள “அனர்த்த நிவாரன
வாழ்வாதார அமையம்“ என்ற அமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விண்ணப்பம் ஒன்றை
அனுப்பி வைத்துள்ளது.
இந்த விண்ணப்பத்தில் 112 நபர்களின்
பெயர்கள் குறிப்பிடப்பட்டு வீடுகளை வழங்குமாறு ஏ.எம்.எம்.ஹுஸைன் என்பவரைத்
தலைவராகக் கொண்ட மேற்படி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இப்பட்டியலில் 53 பேர் சம்மாந்துறையிலும் 29 பேர் கல்முனைக்குடியிலும்
21 பேர் நெய்னாகாடிலும் 05பேர் இறக்காமத்திலும் 03 பேர் அட்டாளைச்சேனையிலும் சாய்ந்தமருதில் 01 நபரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தால் விரைவில் காணிக்கச்சேரி
நடத்தப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.
கரையோரப்பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களும் பயங்கரவாதிகளால்
கொலைசெய்யப்பட்ட பொலிஸ் குடும்பத்தினர்களும் வீடில்லாதவர்களாக இருந்து கொண்டிருக்கும்
நிலையில் இப்பட்டியலில் உள்ள நபர்கள் எவ்வாறு
தெரிவு செய்யப்பட்டார்கள் என பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
0 comments:
Post a Comment