பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்
1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்








13 வருட உத்தரவாதமிக்க கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான 1150 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு அலரிமாளிகைளில் இன்று முற்பகல் இடம்பெற்றது.   
கல்வி அமைச்சின் 'நிறைவான திறன் வெல்லும் வேலை' 13 வருட உறுதிப்படுத்தபட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் ஆசான்களின் பலத்தினால் தேசத்தின் பிள்ளைகளை வளமாக்குவோம்' என்ற தொனிப்பொருளில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உயர்தர தொழில் முறைப் பாடங்களைக் கற்பிப்பதற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் ,கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top