பதவி விலகினார் ஒஸ்டின் பெர்ணான்டோ
ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இதனைதெரிவித்துள்ளது.
அவர் தனது அலுவலகத்தில் இருந்து விடைபெற்றுள்ளதாக அந்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளராக, இலங்கையின் மூத்த அரச உத்தியோகத்தர் ஒஸ்டின் பெர்ணான்டோ கடந்த வருடம் ஜுலை மாதம் 4ஆம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார்.
ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்து வந்து பீ.பி.அபேகோன் கடந்த வருடம் ஜுன் மாதம் 30ஆம் திகதி தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து, அவரது வெற்றிடத்திற்கு ஒஸ்டின் நியமிக்கப்பட்டிருந்தார்.
அரச சேவையில் நீண்ட அனுபவத்தைக் கொண்ட ஒஸ்டின் பெர்ணான்டோ, பொலனறுவை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அரச அதிபர், தபால்மா அதிபர் ஆகிய பதவிகளை வகித்திருந்தார்.
ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இதற்கு முன்னர் அவர் பதவி வகித்திருந்ததோடு, கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றினார்.
அத்துடன், ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கும் வரை, அவர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநரான பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
More
Secretary to the President, Mr Austin Fernando bid
farewell to his office just a while ago.
0 comments:
Post a Comment