சர்ச்சைக்குரிய பேச்சின் இறுதியில்
அப்படி மக்கள் கூறுகின்றார்கள் என்று கூறியிருப்பின்
விஜயகலா மகேஸ்வரன் தப்பியிருக்கமுடியும்
விஜயகலா மகேஸ்வரன் தனது சர்ச்சைக்குரிய
பேச்சின் இறுதியில் அப்படி மக்கள் கூறுகின்றார்கள் என்ற ஒரு வார்த்தையை பேசியிருப்பாரேயானால் அவர் அந்தக் கருத்தில்
இருந்து தப்பியிருக்கமுடியும் எவராலும் ஒன்றும் செய்யமுடியாமல் போயிருக்கும்.
“2009இற்கு முன்னர், விடுதலைப் புலிகளின்
காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமான
உணரும் நிலையில்
இருக்கிறோம். நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமாக
இருந்தால், நாங்கள் வீதிகளில் நிம்மதியாக நடமாட
வேண்டுமானால், எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று
பாதுகாப்புடன் திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்கு,
கிழக்கில் விடுதலைப்
புலிகளின் கை
ஓங்க வேண்டும்.
நாங்கள்,
தலையால் நடந்து,
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்தோம்.
ஆனால் அவர்
தமிழ் மக்களுக்கு
எதுவும் செய்யவில்லை.
எமது மக்களைக்
காப்பாற்றாமல் அவர் தனது கட்சியை வளர்க்கிறார்.
இப்படி பேசிய விஜயகலா மகேஸ்வரன் இக்கருத்தின் பின்னால் அப்படி மக்கள் கூறுகின்றார்கள்
என்று பேச்சைத் தொடர்ந்திருந்தால் அவர் சிக்கலில் மாட்டியிருக்கமாட்டார்.
அரசியல்வாதிகள் ‘அப்படி மக்கள் பேசிக்கொள்கின்றார்கள், இது மக்களின் கருத்தாக இருந்து கொண்டிருக்கிறது”
என்றவாறு சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசும்போது இவ்வாறு கூறி விட்டால் தப்பிக்கொள்ளமுடியும்
பாவம் விஜயகலா மகேஸ்வரனுக்கு அது
தெரியாமல் போய்விட்டது
0 comments:
Post a Comment