கண்டி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள
குடிநீர் வழங்கல் திட்டங்கள்

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம் கண்டி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள குடிநீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்டுகஸ்தோட்டை வெகாகொட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலம் கண்டி மாவட்டத்தில் 116 கிராமங்களை உள்ளடக்கியதாக 38 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 380.7 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் 11,302 குடும்பங்களைச் சேர்ந்த 51,635 பேர் நன்மையடையவுள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top