02.07.2019 அன்று இடம்பெற்ற
அமைச்சரவையில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்




01. 1980ஆம் ஆண்டு இல 47 கீழான தேசிய சுற்றாடல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் ( நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)

இலங்கை சுற்றாடல் தொடர்பில் அனைத்து பிரிவுகளையும் தேசிய மட்டத்தில் தொடர்பு கொள்வதற்கு தேவையான விரிவான சட்ட கட்டமைப்பு ஒன்றை வகுக்கும் நோக்கில் சட்டமாக்கப்பட்டுள்ள 1980ஆம் ஆண்டு இல 47 கீழான தேசிய சுற்றாடல் சட்டத்தை நிகழ்காலத்திற்கு பொருத்தமான வகையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த திருத்தத்தின் போது மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கழிவு பொருட்களை மீள்சுழற்சி செய்யும் பொருட்கள் தொடர்பில் தயாரிப்பாளர்களின் விரிவான பொறுப்பு பல்லின தரப்பு சுற்றாடல் உடன்படிக்கையை வலுவாக்குவதற்காக தேசிய சட்டத்தை தயாரிப்பது தொடர்பான அடிப்படை சுற்றாடல் ஆய்வின் போதும் சுற்றாடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுது சுற்றாடல் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்துதல் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் தேவையற்ற செயற்பாடுகளில் இடம்பெறும். சுற்றாடல் முறைகேடுகளை தடுத்தல் தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்ட சில பொருட்கள் அல்லது உபகரணங்களை கைப்பற்றும் அதிகாரம் மற்றும் அழிக்கும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் சுற்றாடல் சபை சம்பந்தமான அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கி 1980 ஆம் ஆண்டு இலக்கம் 47இன் கீழான தேசிய சுற்றாடல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. சர்வதேச தொலைத் தொடர்பு செயற்பாட்டு வரிக்கான ஒழுங்குவிதிகள் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)

2019ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மூலமான முன்மொழியப்பட்டுள்ள வகையில் தேசிய கட்டணத்தின் அடிப்படையில் செலுத்த வேண்டியவ வரி வீதம் 2019 ஜீலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் அகற்றுவதற்கும் கிடைக்கும் சர்வதேச அழைப்புக்களின் அடிப்படையில் செலுத்த வேண்டிய வரி விசேட தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெறும் சர்வதேச அழைப்பின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய வரி கிடைக்கப்பெறும் உள்ளுர் அனுமதி கட்டணம் ரீதியிலான வரி விநியோக விகிதாசாரம் தொலைத்தொடர்பு அபிவிருத்தி கட்டணம் என்ற ரீதியிலான விநியோகத்திற்கான வீதம் மற்றும் பெற்றுக் கொள்ளப்படும் தேசிய பிரவேச கட்டண அடிப்படையில் செலுத்த வேண்டிய வரி வீதத்திற்கான செல்லுபடியான காலத்தை நீடிப்பதற்கும் 2004 ஆம் ஆண்டு இலக்கம் 11 கீழான நிதி சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக 2019 ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி அன்று 2123/19 கீழான வர்த்தமானிக்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அதனை சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. உளவியல் சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)

இந்த நாட்டின் குடிசன கட்டமைப்பு மற்றும் நோயின் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கம் மாற்றமின்றி இருப்பதுடன் இந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக சுகாதார சேவை வழங்கும் கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. தற்பொழுது நாட்டில் மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதமானோர் உளவியல் ரீதியிலான நோயினால் இருப்பதாகவும் இவர்கள் மத்தியில் 40 சதவீதமானோர் சிகிச்சைப் பெற்றுக் கொள்வதாகவும் அடையாளங் காணப்பட்டுள்ளது. அத்தோடு உளவியல் ரீதியிலான நோய் குறித்து பிரச்சினைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கில் உளவியல் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளது. இதற்கமைவாக 503 மில்லியன் ரூபா செலவில் கண்டி போதனா வைத்தியசாலையில் புதிய உளவியல் சிகிச்சை கட்டிடத் தொகுதி மற்றும் 218.8 மில்லியன் ரூபா செலவில் சிலாபம் மாவட்ட பெரிய ஆஸ்பத்திரிக்காக உளவியல் சிகிச்சை அலகொன்றை அமைப்பதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. புறக்கோட்டை பல்லின போக்குவரத்து மத்திய நிலைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வசதிகளை செய்யும் செயலக குழுவொன்றை அமைத்தல் ( நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)

புறக்கோட்டை பல்வேறான போக்குவரத்து மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கும் இதற்காக தனியார் நிதியின் கீழ் இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி பெறுப்பேற்பதற்காக பொருத்தமான முதலீட்டாளர்கள் மூலம் அபிலாஷைகளை வெளிப்படுத்தலை (EOI))கோருவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை வகுக்கும் பணிகளை பூர்த்தி செய்வதில் திர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் சில நிலவுகின்றன. தொழில்நுட்பம் மற்றும் நிதி தொடர்பான ஆய்வு அறிக்கை அதனை நடைமுறைப்படுத்தும் மூலோபாயங்களை பூர்த்தி செய்வதற்கும் அதில் பிரச்சினைகளுக்காக தலையீடுகளை மேற்கொள்ளும் தீர்மானம் மேற்கொள்வதற்கும் புறக்கோட்டை பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்தின் சிறப்புப் பணிக்குழு என்ற ரீதியில் செயல்படுவதற்கு முக்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக நுவரெலியாவில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 29ஆவது விடயம்)

உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உயர்மட்டத்தில் கவரக்கூடிய வகையில் நுவரெலியா பிரதேசம் நாட்டின் உன்னதமான நிலையில் அமைந்துள்ளது. அத்தோடு இயற்கை அழகைக் கொண்டிருப்பதினால் இந்த பிரதேசம் சுற்றுலா துறையினரை மேலும் கவரக்கூடிய வகையிலான நடவடிக்கையாக நானுஓயாவிலிருந்து சிங்கில் ட்ரீ மலை மற்றும் கிரகரி குளம் வரையில் கேபல் கார் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக வரையறுக்கப்பட்ட அவுட்டோர் இன்ஜினியரிங் லங்கா தனியார் நிறவனம் மற்றும் அதன் வெளிநாட்டு பங்குதாரர்களான டொபெல்லெம் கேபில் கார் நிறுவனத்தினால் திட்ட ஆலோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைவாக 50 மில்லியன் டொலர் முதலீட்டின் கீழ் நானுஓயா ரயில் நிலையம் நுவரெலியா குதிரை பந்தத் திடல் மற்றும் சிங்கல் ட்ரீ மலை உச்சியை கடந்த வகையில் 21 கோபுரங்களின் மேல் கட்டியெழுப்புவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் 10 நிமிடங்களில் செல்லக்கூடிய 86 சிறிய கூடங்களை கொண்டதுடன் இதில் முதல் கட்டத்தின் கீழ் 46 கூடங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டம் முதலீட்டு சபையின் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டுவதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அதிக அனர்த்த நிலை காணப்படும் பிரதேசங்களில் முன்னோடி பேரழிவு ஏற்பாட்டு (Forerunner Disaster Retaliation) வீடுகளை நிர்மாணித்தல் ( நிகழ்ச்சி நிரலில் 36ஆவது விடயம்)

திடீர் அனர்த்த நிலைக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நன்கொடையாளர்களுக்கு நிதியை வழங்கக்கூடிய செயலாளர் இடர்முகாமைத்துவ அமைச்சு என்ற பெயரில் கணக்கொன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2019 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி அளவில் இந்த கணக்கில் 294.72 மில்லியன் ரூபா இருப்பில் அறிக்கையிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய மற்றும் அனர்த்தம் கூடுதலாக உள்ள வலயங்களில் வாழும் குடும்பங்களுக்காக முன்னோடி பேரழிவு ஏற்பாட்டு(Forerunner Disaster Retaliation)  பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு சீனாவின் செயற்பாட்டு நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனை அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இரத்தினபுரி களுத்துறை ஆகிய மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்படட்டுள்ள 400 வீடுகளில் 230 வீடுகளை மேலே குறிப்பிட்ட கணக்கில் உள்ள நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிப்பதற்காக அரச நிர்வாகம் இடர்முகாமைத்துவம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளில் சுற்றாடல் கல்வியை மேம்படுத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 42ஆவது விடயம்)

3 தசாப்த காலமாக இடம்பெற்ற மோதலின் காரணமாகவும் பின்னர் குறைந்த அபிவிருத்தி கிளிநொச்சி பிரதேசத்தில் கல்வி நடவடிக்கைகளை உயர்தரத்தில் கொண்ட வகையில் முன்னெடுக்கக் கூடிய வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக கொரிய சர்வதேச புரிந்துணர்வு பிரதிநிதிகளினால் வழங்கப்பட்டுள்ள 2மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் 2011ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் நீண்டகாலமாக 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்ட 13 பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான திட்டமொன்று 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் கீழ் நடைமுறைப்படுத்துவதாக கல்வி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

08 .கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பாக மதிப்பீடு செய்யும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பெட்டிகளோ கெம்பஸ் (பிரைவட்) லிமிட் தொடர்பில் அவதானிப்பு Observations அறிக்கை ( நிகழ்ச்சி நிரலில் 48ஆவது விடயம்)

கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறையை மதிப்பீடு செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரினால் பெட்டிகளோ கெம்பஸ் (பிரைவட்) லிமிடட் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கட்ட அவதானிப்பு ழுடிளநசஎயவழைளெ அறிக்கை தொடர்பில் அமைச்சரவை கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை மதிப்பீடு செய்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நிதி நகரதிட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி தேசிய ஒன்றிணைப்பு அரச மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச அமைச்சர்களின் கொண்ட அமைச்சரவை துணை சபையொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

09. தொற்றா நோயான சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்தBlood and infusion நடவடிக்கைகளை வீடுகளிலிருந்து மேற்கொள்வதற்கான வசதிகளை செய்தல் ( நிகழ்ச்சி நிரலில் 50ஆவது விடயம்)

காரணம் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோய் மற்றும் அடையாளங் காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்தBlood and infusionபயன்படுத்தி வீடுகளிலேயே மேற்கொள்வதற்காக உத்தேச திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளர்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காகவும் மேலும் சிறந்த வாழ்க்கை நிலையை மிகவும் சிறந்த தாதியர் நிலைமையை அடைந்து கொள்வதற்காக இந்த திட்டத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடிய வகையில் கண்காணிக்கப்பட வேண்டும்;. இதனால் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் கலந்துரையாடல் குழுவின் சிபாரிசுக்கமைய இந்த திட்டத்தினால் நோயாளர்களுக்காக மாதமொன்றுக்கு 1,03,740 ரூபா வரை வரையறையுடன் லுசேன்சியா ஹெல்த் கேயார் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு 8 வருட காலத்திற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கை திரிபோஷா நிறுவனத்திடம் திரிபோஷா தயாரிப்புக்கு தேவையான சோயா அவரை 6000 மெற்றிக் தொன்னை விநியோகிப்பதற்கான பெறுகை (நிகழ்ச்சி நிரலில் 51ஆவது விடயம்)

போஷாக்கின்மையினால் உள்ள பிள்ளைகள் போஷாக்கு பிரச்சினைகளுடனான கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்துள்ள உணவாக திரிபோஷாவை தயாரிப்பதற்கு வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு தேவையான சோயா அவரை அதாவது 600 மெற்றிக் தொன்னை கொள்வனவு செய்வதற்காக பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட என்டிகே யுனேட்டட் எக்ரிவென்சஸ் தனியார் நிறுவனத்திடம் 840 மில்லியன் ரூபா வழங்குவதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. களனியில் இருந்து அறுவா காடு வரையிலும் திண்மக் கழிவுப் பொருளை ஏற்றிச் செல்வதற்கான கொள்கலன் பெட்டிகளை கொள்வனவு செய்தல் ( நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)

தேசிய பிரச்சினையாக நிலவும் நகர மற்றும் கழிவு பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள அறுவக்காடு நகரம் மற்றும் கழிவு இயற்கை கழிவு நிலத்தை நிரப்புதல் கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றுக்கான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்காக களனியில் இருந்து அறுவக்காடு வரையிலும் கழிவு பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு தேவையான கொள்கலன் பெட்டிகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய Ms / Dongfang Electric International Corporation என்ற நிறுவனத்திற்கு மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிருத்தி அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. உரத்தை கொள்வனவு செய்தல் (2019 ஜுலை) ( நிகழ்ச்சி நிரலில் 54ஆவது விடயம்)

வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் ஜுலை மாதத்திற்கான உரத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக யூரியா (கிரனி யுலா) 30 000 மெற்றிக் தொன்னும் 1 மெற்றிக் தொன் 31,825 அமெரிக்க டொலர் வீதமும் எக்ரிகோமோடிரிஸ் என்ட் பைனான்ஸ் நிறுவனத்திடமும் மியுரி யெட் ஒப் பொடேஸ் மெற்றிக் தொன் 3000 மெற்றிக் தொன்னை 1 மெற்றிக் தொன் 342.2 அமெரிக்க டொலர் வீதமும் வரையறுக்கப்பட்ட எக்ரிகல்சரல் ரிசோர்சஸ் என்ட் இன்வெஸ்ட்மன்ட் என்ற தனியார் நிறுவனத்திடமும் ட்ரிபல் சுபர் பொஸ்பேட் 15000 மெற்றிக் தொன்னை 1 மெற்றிக் தொன் 324 அமெரிக்க டொலர்கள் வீதமும் வரையறுக்கப்பட்ட கோல்டன் பாலி இன்டர்நெஷனல் தனியார் நிறுவனத்திடம் கொள்வனவு செய்வதற்காக விவிசாய கிராமிய பொருளாதார அபிவிருத்தி நீரப்;பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. அரசு நிதி விதிகளின் அடிப்படையிலான கொள்கை கட்டமைப்பில் திருத்தம் (நிகழ்ச்சி நிரலில் 56ஆவது விடயம்)

அரசாங்கத்தின் கடனை பேண்தகு வகையில் முன்னெடுத்தல் மற்றும் அரச நிதி இடர் முகாமைத்துவத்திற்காக 2003ஆம் ஆண்டு இல 3 இன் கீழான அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அரச நிதி முகாமைத்துவ பொறுப்பு கட்டமைப்பின் கீழ் அரச நிதி அலுவல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து எதிர்கொள்ளப்பட வேண்டிய குறுநிரல் பொருளாதார அரச நிதி சவால்கள் சுனாமி அனர்த்தம் மற்றும் நீண்ட கால உள்ளக மோதல் காரணமாக இந்த சட்டத்தின் மூலம் சில அரச நிதி மாற்றத்திற்கு அமைவாக நியமிக்கபட்டிருந்த இலக்குக்கு 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முடியாமல் போனது. இதனால் இதன் சில அரச நிதி இலக்குகள் 2013 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் திருத்தங்களுக்கு உடன்பட்டதுடன் தற்போதைய அரச நிதி ஒழுங்குறுத்தல் கட்டமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக பொறுப்பு மிக்க அரச நிதி முகாமைத்துவத்தை வலுவூட்டும் நோக்கில் கடன் விதிகள் மத்திய கால அரச நிதி கட்டமைப்பொன்று முன்னெடுப்பு இலக்கு தன்னியக்க சர்பார்த்தல் முறையொன்று நம்பிக்கைக்குரியவருடன் ஒழுக்க விதிகள் மற்றும் பொறுப்பு மற்றும் கண்காணிப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய தூர இலக்கு பொறுப்பை கொண்டதான அரச நிதி முகாமைத்துவ கட்டமைப்பொன்றை நிர்மாணிக்கும் நோக்கில் அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் அவ்வாறு இல்லாவிடின்; சம்பந்தபட்ட திருத்தத்தை தற்பொழுது திருத்த சட்ட மூலமாக தயாரிக்கப்பட்டு அரச நிதி முகாமைத்துவ சட்டத்திற்குள் உள்வாங்குவதற்கு நிதி அமைச்சு முன்வைத்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top