கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக
எதிர்வரும்
05.08.2019 வரை மன்சூர்
பணியாற்ற நீதிபதி
இளஞ்செழியன் உத்தரவு
கிழக்கு
மாகாண கல்விப்
பணிப்பாளராக எதிர்வரும் 05.08.2019 வரை எம்.கே.எம்.
மன்சூர் பணியாற்ற
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை
மேல் நீதிமன்ற
நீதிபதி இளஞ்செழியன்
நேற்றையதினம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும்,
இது குறித்து
தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின்
பெயரை நீக்கிவிட்டு
புதிய ஆளுநரின் பெயரினை இணைக்குமாறும் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு
மாகாண முன்னாள்
ஆளுநர் ரோஹித
போகொல்லாகம அவரது பதவி காலத்தின்போது எம்.கே.எம்.
மன்சூரினை கல்விப்
பணிப்பாளராக நியமித்திருந்தார்.
அதற்கு
முன்னர் அந்த
பதவியில் இருந்த
எம்.ரி.ஏ
நிசாமின் நிர்வாக
நடவடிக்கைகள் மந்த கதியில் இருந்தமையின் காரணமாக
அவர் அந்த
பதவியில் இருந்து
நீக்கப்பட்டு மன்சூர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
4 மாதங்கள்
மாகாணக் கல்விப்
பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றி வந்த வேளை
கடந்த பெப்ரவரி
முதலாம் திகதி
தொடக்கம் மாகாண
கல்விப்பணிப்பாளராக எம்.ரி.எ.நிசாம்
நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனைத்
தொடர்ந்து கிழக்கு
மாகாண ஆளுநராக
பொறுப்பேற்ற முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் தலையீட்டினால் மன்சூர் அப்பதவியில் இருந்து
நீக்கப்பட்டு மீன்டும் நிசாம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,
தனது பதவி
பறிக்கப்பட்டமை அநீதி என குறிப்பிட்டு கல்விப்பணிப்பாளர்
மன்சூர் திருகோணமலை
உயர் நீதிமன்றில்
வழக்குத் தொடர்ந்திருந்தார்.
மேலும்,
ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால்
வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களை அமுல்படுத்தக்கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை
உத்தரவும் பிறப்பித்திருந்தது.
அதனைத்
தொடர்ந்து தொடர்ந்தும்
கிழக்கு மாகாண
கல்விப் பணிப்பாளராக
மீண்டும் தனது
கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில்
குறித்த வழக்கு
நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே
மன்சூர் எதிர்வரும்
8ஆம் மாதம்
5ஆம் திகதி
வரை தொடர்ந்து
பணியாற்ற உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment