இலங்கையின் அபிவிருத்திகளுக்கு
முஸ்லிம் நாடான சவூதி அரேபியா
5 வருட காலத்திற்குள் 408.72 மில்லியன்
அமேரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக
தூதரகம் தெரிவிப்பு

முஸ்லிம் நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா கடந்த 5 வருட காலத்திற்குள் இலங்கையின்  அபிவிருத்திகளுக்கு 408.72 மில்லியன் அமேரிக்க டொலா்  வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள சவூதி அரேபியாவின் இலங்கைத் துாதரகம் நேற்று தெரிவித்துள்ளது.


தெரன தொலைக்காட்சியில் சவூதி பற்றிய தவறானதொரு கருத்தினை முன்னாள் ஆளுனா் கேமக்குமார நானயக்கார முன்வைத்தன் நிமித்தம் துாதுதரகம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.

அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நிதி விபரம் வருமாறு,

நீர்விநியோகம் வடிகாலமைப்பு அபிவிருத்தி  அமெ.டொலா் 26.64.மி -
மின்சார அபிவிருத்தித் திட்டம்  அமெ.டொலா் . 12.83மி-
வயம்பா பல்கழைக்கக அபிவிருதிஅமெ.டொலா்  28.மி
சப்ரகமுவா பல்கழைக்கழக மருத்துவ பீடம் நிர்மாணித்தல் அமெ.டொலா்  60மி -
சகல வசதிகளும் கொண்ட 7 மாடிகளைக் கொண்ட நரம்புதளா்ச்சி - வலிப்பு பெட் ஸ்கனா் உட்பட விடுதிகள் கொண்ட ஒரு வைத்தியசாலை கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி-  அமெ.டொலா் 32மி
மேலும் ஒரு வைத்தியசாலை மேம்படுத்தல் அபிவிருத்தி -அமெ.டொலா் .14.93மி 

மகாவலி கங்கை குளங்கள் பி.வலையம் அபிவிருத்தி,அமெ.டொலா் .22.66மி - களுகங்கை ஆறு அபிவிருத்தி - அமெ.டொலா்  46மி -
திருமலை - கண்டி அதிவேக வீதி அபிவிருத்தி  அமெ.டொலா் .10.66மி -

 மட்டக்களப்பு செங்கல்லடி -பதுளை அதிவேகவீதி அபிவிருத்தி அமெ.டொலா்  10.66மி

இவற்றுக்கு மேலாக சவூதி அரேபியாவில்  கடந்த  4 தசாப்தங்களாக இலங்கையா்கள் 2 இலட்சம் பேர் அங்கு தொழில் செய்கின்றனா்.

ஊதியம் பெற்று இலங்கைக்கு அந்நியச் செலவானியை அனுப்புகின்றனா.  இலங்கையின் தேயிலை, வாசனைப் பொருட்கள், பழவைகைகள் போன்ற பல்வேறு உற்பத்திப் பொருட்களை சவூதி அரேபியா கொள்வனவு செய்வதாகவும் அறிவித்துள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top