ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கும்
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு
அனைத்துலக
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவியுடனேயே,
ஈஸ்டர் ஞாயிறு
பயங்கரவாத தாக்குதல்கள்
நடத்தப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய
போதைப்பொருள் தடுப்பு வார இறுதி நாளான
இன்று நிகழ்த்திய
உரையின் போதே
அவர் இவ்வாறு
கூறினார்.
“அனைத்துலக
பயங்கரவாத குழுக்கள்
பெரும்பாலும் போதைப்பொருள் வணிகத்தின் மூலம் ஈட்டப்பட்ட
வருவாயின் மூலமே
நிதியைப் பெறுகின்றன.
போதைப்பொருள்
மற்றும் மரணதண்டனை
ஆகிய விவகாரங்கள்
தொடர்பாக, சில நாட்களுக்கு முன்னர்
ஐ.நா
பொதுச்செயலாலர் அன்ரனியோ குரெரெசுடன் கலந்துரையாடினேன்.
நாட்டில்
போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது
என்பதை அவரிடம்
சுட்டிக்காட்டிய வேளையில், மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறீர்களா என்று ஐ.நா பொதுச்செயலாளர்
கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு நான்
உறுதியாகப் பதிலளித்திருந்தேன்.
எனது
கண்களுக்கு முன்பாக நாடு அழிக்கப்படுவதை பார்க்க
முடியாது என்பதால்
மரணதண்டனை கட்டாயம்,
நடைமுறைப்படுத்தப்படும்.
மரணதண்டனையை
நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி,
மற்றும் அரசசார்பற்ற
நிறுவனங்கள், போதைப்பொருட்களை நாட்டில் இருந்து அகற்றுவதற்கு
என்ன செய்திருக்கின்றன?
மரணதண்டனையை
நடைமுறைப்படுத்தினால் ஜிஎஸ்பி பிளஸ்
சலுகையை நிறுத்த
நேரிடும் என்று
ஐரோப்பிய ஒன்றியம்
கூறியிருப்பது ஒரு எச்சரிக்கை தான். எந்தச்
சூழ்நிலையிலும், சுதந்திரமான நாடு ஒன்றை அச்சுறுத்த
முடியாது”
மரணதண்டனை
அமுல்படுத்தினால் ஜீ எஸ் பி ப்ளஸ்
சலுகை ரத்துச்
செய்யப்படுமென்று இறையாண்மை உள்ள எமது நாட்டை
ஐரோப்பிய ஒன்றியம்
எச்சரிக்கிறது. இது நல்லதல்ல.
போதைப்பொருள்
ஒழிப்பு பற்றி
உங்களுக்கு தெரியும். அதை ஒழிக்கும்போது வெற்றி
போல தடைகளும்
வருகின்றன. போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடந்த
போது 9 மாகாணங்களிலும்
இது வெற்றிகரமாக
நடந்தது. 30 வருடம் யுத்தம் நடந்தது. போதைப்பொருள்
விற்பனை தான்
பிரபாகரனின் வருமானம்.உலகத்தில் உள்ள போதைப்பொருள்
வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்கு தொடர்பு இருந்தது. உலக
யுத்தம் போல
உலகில் போதைப்பொருள்
வர்த்தகமும் ஒரு தீவிரவாதம் தான்.
போதைப்பொருள்
வர்த்தகத்தின் மூலம் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கினார்.
யுத்தம் நடத்தினார்.
போதைப்பொருள்
ஒழிக்க வேண்டுமாயின்
அமெரிக்கா முழுதும்
மரணதண்டனை அமுலாக
வேண்டுமென அமெரிக்க
ஜனாதிபதி கூறியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பில் எனக்கு 40 வருட அனுபவம்
உள்ளது. நான்
சிறிய பதவியில்
இருந்து வந்தபோதே
போதைப்பொருளுக்கு எதிராக செயற்பட்டேன்.
11 ஆயிரம்
பேர் இருக்க
வசதியுள்ள சிறையில்
24 ஆயிரம் பேர்
உள்ளனர்.அவர்களில்
15 ஆயிரம் பேர்
போதைப்பொருள் குற்றவாளிகள். இதில் பெண்கள் சிக்கியிருப்பது
பரிதாபம். பெண்கள்
கூடுதலாக பியர்
, சிகரெட் , கஞ்சா , வைன் பாவிக்கின்றனர். சிகரெட்
தான் எல்லாவற்றுக்கும்
ஆரம்பம். வருடம்தோறும்
50 ஆயிரம் பேர்
போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறை செல்கின்றனர்.இவர்களில்
பெண்கள் அதிகமாக
உள்ளனர்.
இன்று
பாடசாலைகளில் இலவசமாக போதைப்பொருள் வழங்கப்படுகின்றன. அப்படி கொடுத்து அவர்கள் அடிமையான
பின்னர் வர்த்தகத்திற்கு
அவர்களை பலியாக்குகின்றனர்.
ஒரு இனத்தை
அழிக்க சிறந்த
பொருள்தான் இந்த போதைப்பொருள்.
அரசியலை
ஆட்சியாளர்களை தீர்மானிப்பது போதைப்பொருள்
வர்த்தகர்கள் .ஆனால் நாங்கள் அவற்றுக்கு அஞ்சவில்லை.
பல நாடுகளில்
இன்னும் மரணதண்டனை
அமுலில் உள்ளது.
* பிரபாகரன்
போதைப்பொருள் வியாபாரம் நடத்தி ஆயுதங்களை வாங்கினார்.
* மரணதண்டனையை
எதிர்ப்பவர்கள் போதைப்பொருள் ஒழிப்புக்கு என்ன செய்தார்கள்
?
* ஏப்ரல்
21 ஆம் திகதி
நடந்த தாக்குதலுக்கும்
சர்வதேச போதைப்பொருள்
வர்த்தகத்துக்கும் எங்கோ ஒரு
இடத்தில் தொடர்பு
என்றும் அவர்
கூறினார்.
0 comments:
Post a Comment