அடை மழையின் கோர முகம்
கல் மனதையும் கரைய வைத்த புகைப்படம்;

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் மாத்திரம் மழையினால் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகளிலிருந்து அறிய முடிகின்றது. 30 மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் அந்நாட்டில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தின் பாதிப்பால் உயிரிழந்த 3 வயது குழந்தையின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இந்தப் புகைப்படம் அம் மாநிலத்தில் பெய்து வரும் அடை மழையின் கோர முகத்தினை காட்டியுள்ளது.

முசாபர்பூர் பகுதியில் உள்ள ஷீடால்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரானி தேவி, தனது 4 குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். மழை வெள்ளம் காரணமாக ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான தண்ணீர் சென்றுள்ளது.

அப்போது, எதிர்பாராத விதமாக 3 வயது அர்ஜுன் என்ற குழந்தை ஆற்றில் தவறவே, காப்பாற்றும் நோக்கத்தில் பதறிப்போய் தாயும் ஆற்றில் குதித்துள்ளார். தாய் குதித்ததைப் பார்த்த மற்ற 3 குழந்தைகளும் ஆற்றில் குதித்துள்ளன.

உடனே, சுதாரித்துக்கொண்ட அருகில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி ரானி தேவி மற்றும் 1 குழந்தையை காப்பாற்றினர். எனினும், 3 குழந்தைகளை தண்ணீர் அடித்துச் சென்றது. இந்நிலையில், குழந்தை அர்ஜுனின் சடலம் மீட்கப்பட்டது.

அர்ஜுனின் சடலத்தின் புகைப்படம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் அர்ஜுனின் புகைப்படத்தை பதிவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top