முஸ்லிம்களின்
பிரச்சினைகளுக்கு அரசாங்கம்
எவ்வித தீர்வுகளையும்
வழங்காத நிலையில்
மீண்டும் பதவியேற்பதில்லை என ஹரீஸ் எம்.பி
உறுதியாகக் கூறியுள்ள
நிலையில்
முஸ்லிம் எம்.பி க்கள் அமைச்சு பதவி ஏற்பதில் தாமதம்!!
முன்னாள்
இராஜாங்க அமைச்சரான முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் முஸ்லிம்களின்
பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எவ்வித தீர்வுகளையும் வழங்காத நிலையில் மீண்டும்
பதவியேற்பதில்லை என உறுதியாகக் கூறியுள்ள நிலையில் முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அமைச்சு பதவி ஏற்பதில் தாமத நிலை தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு தழுவிய
ரீதியில் முஸ்லிம்களின் பிரச்சினை மற்றும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு
அரசாங்கம் எவ்வித தீர்வுகளையும் வழங்காத நிலையில் தன்னால் அமைச்சுப் பொறுப்பினை
மீளப்பெற முடியாது. அப்படி அவசரப்பட்டு பெறவிரும்பவில்லை
என்று ஹரீஸ் தெரிவித்துள்ளாரெனத்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்
நிலையில் எச்.எம்.எம்.ஹரீஸ் விட்டு விட்டு முஸ்லிம் கட்சிகள் அமைச்சு பதவியை
ஏற்பதா இல்லையா என இறுதி தீர்மானத்திற்கு வரமுடியாத நெருக்கடிக்கு நிலைக்கு
இவ்விடயம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சு
பொறுப்புகளை ஏற்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விருப்பதுடன் இருந்தாக
கூறப்படும் நிலையில் ஹரீஸின் எதிர்ப்பால் அவர் இறுதி முடிவை எட்ட முடியாத நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரவூப் ஹக்கீம்
எம்.பி லண்டன் சென்றுள்ள நிலையில் அவர் திரும்பிய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கூடி இறுதி
தீர்மானம் எடுக்க உள்ளதாக ஊடக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment