ஜனாதிபதி வெளிநாடு
செல்வதால்
இன்று அமைச்சரவை கூடுகின்றது!
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன நாளையதினம் பிரித்தானியாவுக்கு பயணமாவதாக தகவல்கள் கூறுகின்றன.
தனிப்பட்ட
விஜயத்தினை மேற்கொண்டு அவர் இந்தப் பயணத்தினை
முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரியின்
மகனது பட்டமளிப்புவிழா
லண்டனில் இடம்பெறவுள்ள
நிலையில் குறித்த
விழாவில் கலந்துகொள்வதற்காகவே
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன இந்த
பயணத்தினை முன்னெடுத்துள்ளார்
எனக் கூறப்படுகின்றது.
இதேவேளை
ஜனாதிபதி லண்டனில்
மூன்றுநாள் தங்கியிருப்பதன்காரணமாக செவ்வாய்க்கிழமை
நடைபெறவேண்டிய அமைச்சரவைக் கூட்டத்தை இன்றையதினம் பிற்பகல்
வேளையில் அவர்
கூட்டவுள்ளதாக அந்த தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment