முஸம்மில் போன்ற முஸ்லிம்களோடு
தனக்கு எவ்வித கோபமும் இல்லை
விமல் வீரவங்ச தெரிவிப்பு

தனது சகாவான முஸம்மில் போன்ற முஸ்லிம்களோடு தனக்கு எவ்வித கோபமும், குரோதமும் இல்லை.இந்த நாட்டை அடிப்படை வாதத்தின் பக்கம் இழுத்துச்செல்லப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. என தேசிய அசுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்
நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற வஹாப்வாத அடிப்படைவாத்த்திற்கு எதிரான மக்கள் இயக்க கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் பாரம்பரிய (சூபி) முஸ்லிம் சமூகமும் அடிப்படைவாத்த்திற்கு எதிராகவே செயல்படுகின்றது. எல்லாத் தரப்புக்களும் ஒன்றிணைந்து நாட்டில் வஹாபிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க முன் வரல் வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது நாட்டில் அரசாங்கம் ஒன்றை இல்லாமல் செய்வதே எனவும் தெரிவித்தார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top