பண்டாரகம அட்டுலுகம
முஸ்லிம் பெண்ணின் அவதூறுக்கு
பள்ளிவாசல்கள் சம்மேளனத்தவர்களின் பதிலும்
பிரதேச மாற்று மத பெண்களின் சாட்சியமும்

பண்டாரகம அட்டுலுகம பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஓர் ஊடக சந்திப்பினை நேற்று 05ம் திகதி அங்கு ஏற்பாடு செய்திருந்தனா் அம்மார் மௌலவியும் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும் கருத்து தெரிவித்தனா். இவ் ஊடக சந்திப்பில் கடந்த வாரம் ஞானசாரத் தேரருடன் இணைந்து இப் பிரதேசத்தில் வாழும் ஓர் முஸ்லிம் பெண் அட்டுலுகம பண்டாரகம ஊரையும் முஸ்லிம் சமுகத்தினையும் இஸ்லாம் மதத்தினையும் அவதுாறாக ஊடகங்களில் சொல்லியிருந்தார்.
அதற்கு பதில் வழங்குவதற்காகவே குறித்த பெண்னின் அருகாமையில் வாழும் சிங்கள பெண்கள் சிலா் ஒரு முஸ்லிம் பெண்ணும் முன்வந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தனா் -(ஆனால் அங்கு வருகை தந்த கிரு தெரன,சுவா்னவாகினி தொலைக்காட்சி நிறுவனங்கள் இதுவரை இந்தச் செய்தியை அவா்களில் ஊடகங்களில் ஒளிபரப்ப வில்லை. ஆனால் குறிந்த பெண்ணினதும் ஞானசாரத் தேரரின் கருத்தினை பலமுறை ஒளிபரப்பியுள்ளனா் .

இந்த முஸ்லிம் பெண் பேருவளை மருதானை கடலோரத்தில் வாழ்ந்து வந்தவா் ஏற்கனவே ஒரு முஸ்லிமை திருமணம் செய்து பின்னா் இங்கு குடிவந்தவுடன் ஒரு சிங்களவரை திருமணம் முடித்தார்.

 அவா் சாரதி தொழில் பார்ப்பவா் 2 பிள்ளளைகளும் உள்ளன, இப் பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் ஒன்றில் இவரது பிள்ளைகள் கல்வி கற்கின்றார்கள். கடந்த சுனாமி அனா்த்த்தினால் வீடுகளை இழந்த
பேருவளை களுத்துறை பாணனந்துறையைச் சோந 23 குடும்பங்கங்களுக்கும் ஒரு என்.ஜி. ஊடாக அட்டுலுகம பிரதேசத்தில் ஒரு காணியில் 13 சிங்கள குடும்பங்கள் 9 முஸ்லிம் குடும்பங்களுக்கும் சுனாமி வத்தை என பெயரிட்டு அங்கு வீடுகளை நிர்மாணிதது அரசாங்கத்தினால் குடியமர்தப்பட்டோம்.

கடந்த 12 வருடங்களாக இப் பிரதேச முஸ்லிம், சிங்கள மக்களுடன் அந்நியோன்னியமாகவும் ஜக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றோம். இந்தப் பெண்னின் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் சரியில்லை. கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி இந்தப் பெண்னின் வீட்டிற்குள் ஓர் ஆண் உள் இருப்பதாகவும் இவரது கணவா் அன்று தொழிலுக்குச் சென்றுவிட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ள நாங்கள் அவதானித்தோம். நாங்களாகவே இந்த வீட்டை சுற்றிவலைத்து பொலிஸாரின் அவசர அழைப்பு 119க்கு அழைப்பு விடுத்தோம்.

அந்த ஆண் நபரை அங்கு வந்த பொலிஸார் சீலையால் மறைத்து கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அவா் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தராகவே இருக்கக் கூடும். அதன் பிறகு தான் இந்தப் பெண் ஞானசார தேரா் உடன் சென்று இந்த பிரதேச முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் உறுப்பிணா்கள் பலவந்தமாக இவரது கணவனை முஸ்லிம் மதத்திற்கு மாறச் செல்லியதாகவும் இப் பெண் பௌத்தமதத்திற்கு மாறுவதற்கு அடித்தாகவும் பொய் சொல்லுகின்றார். இவா் ஒரு மதமும் இல்லை முஸ்லிம் பெயரை வைத்து முஸ்லிம் மதத்திற்கும் அச் சமுகத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் அவதுாறு சொல்லுகின்றாள்.

இப் பெண்ண ஒருபோதும் யாரும் பலவந்தப்படுத்தியதாகவும் அவரை முஸ்லிம்கள் அடிக்கவும் இல்லை இந்த 23 குடும்பங்களும் சாட்சியாக உள்ளோம். இந்தப் பிரதேசத்து முஸ்லிம்கள் எங்களுக்கு உதவிகள்தான் ஏதும் செய்வார்கள் ஆனால் இவ்வாறான ஒரு தனிப்பட்ட சம்பவங்களில் அவா்கள் சம்பந்தப்பட இல்லை. இங்கு ஒரு நீதி தான் உள்ளது சரிஆ நீதி ஒன்று இங்கு இல்லை. அவ்வாறு நீதியை பிரயோகப்படுத்தியாக ஞானசாரா்தான் ஊடகங்களில் சொல்லுகின்றார். இப் பிரதேசத்தில் 3 பன்சலைகள் உள்ள அவா்களிடமும் விசாரிக்காது ஞானசாரா் தேரா் இந்தப் பெண்ணை கொழும்புக்கு அழைத்துச் சென்று ஊடகங்களில் பொய்யான கருத்துக்களையும் இவரை நாங்கள் சுற்றிவலைத்த வீடியோவை திரித்துக் காண்பித்து முஸ்லிம்கள் அடிக்க வந்தாகவும் தவறாகக் காட்டுகின்றார்கள் . இந்தப் பெண் இஸ்லாம் அல்லது பௌத்த மதமே இல்லை. சுனாமியினால் இந்தப் பிரதேசத்தின் குடிபெயா்ந்து இங்கு வாழ் மக்களை கொச்சைப்படுத்தி இவ் ஊருக்கு அவதூறு சொல்லி பொலிஸிலும் எங்களது பிரதேசத்தில் வாழும் சக முஸ்லிம் 5 அப்பாவிகளையும் கைது செய்வதற்கு துணையாகவுள்ளார்..

முஸ்லிம் பெண் ஒருவரும் கருத்து தெரிவிக்கையில் எனது கணவா் பேருவளை இந்தப் பெண்னை நன்கு தெரிந்தவா் அருகில் வாழகின்றோம். எனது கணவா் அன்றாடம் மீன்பிடித்து குடும்பத்தினை பாதுகாப்பவா் எனது பாடசாலை செல்லும் மகன்  இவரது வீட்டுக்கு கல் வீசியதாகச் சொல்லி கடந்த 7 நாட்கள் கைது செய்து சிறையில் உள்ளதாகவும் அப்பிரதேச முஸ்லிம் பெண் அழுகையுடன் குறிப்பிட்டார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top