குற்றப்புலனாய்வு பிரிவினர் ஷாபி விடயத்தினை
அரசியல் நோக்கத்தில் முன்னெடுக்கிறார்களாம்!
பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பொறுப்பு கூறுவது யார்?

வைத்தியர் ஷாபி தொடர்பில் ஆராய
குருநாகல் வைத்தியசாலைக்கு
படையெடுத்த ராவணா பலய அமைப்பு!


குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பில் ஆராய்வதற்காக தேரர்கள் குழுவொன்று குருநாகல் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகளே நேற்று இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது ராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள் குருநாகல் வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது வைத்தியர் ஷாபி தொடர்பிலான விடயங்களை அரசாங்கம் மறைக்க முயற்சிப்பதன் காரணமாகவே அவர் தெராடர்பில் ஆராய்வதற்கு தாம் குருநாகல் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு வைத்திய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய வேளையில் வைத்தியர் ஷாபி சுமார் 8000 சத்திர சிகிச்சைகளை செய்துள்ளது தெரிய வந்ததாக ராவணா பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும் குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த விடயத்தினை எந்த அரசியல் நோக்கத்தில் முன்னெடுக்கிறார்கள் என்பது தமக்கு தெரியாது எனவும் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பொறுப்பு கூறுவது யார்? என தற்போது கூற முடியாதுள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top