கல்முனை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட
சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட மூவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி மரண சான்றிதழ் வழங்குவதற்கான விசாரணை இடம்பெற்றுள்ளது.

குறித்த விசாரணை இன்றைய தினம் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் .என்.றிஸ்வான் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சஹ்ரானின் தங்கையான நியாஸ் மதனியா, அவரது கணவர் எம்.எம்.நியாஸ், சாய்ந்தமருது தாக்குதலில் பலியான உரைகல் ஊடகவியலாளர் என கூறப்படும் நியாஸ் என்பவரின் மனைவி அஸ்மியா உள்ளிட்டோர் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குற்றப்புலனாய்வு வாகனம் மற்றும்சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top