இலங்கை நாட்டின் பூர்வீகக்
குடிகள் சிங்களவர்களே!
இலங்கை சிங்கள -
பௌத்தர்களின் நாடு
என தைரியமாக கூறும்
சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்
ஒருவரையே
பௌத்த பிக்குகள் ஆதரிக்க
வேண்டும்
- ஞானசார தேரர்!
இலங்கை
நாட்டின் பூர்வீகக் குடிகள் சிங்களவர்களே என்றும், அதனால் சிங்கள ஆட்சியை நிலைநாட்டப் போவதாக அறிவித்திருந்த பொதுபல
சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரையே
பௌத்த பிக்குகள் ஆதரிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை
சிங்கள - பௌத்தர்களின் நாடு என தைரியமாக தெரிவிக்கும் ஒருவரை சிங்களவர்களும்,
பௌத்தர்களும் இணைந்து வெற்றிபெறச் செய்யப்
போவதாகவும் ஞர்னாசார தேரர் அறிவித்துள்ளார்.
சிங்கள
அரசுக்காக ஒட்டுமொத்த நாடும் அணிதிரள்வோம் என்ற தலைப்பில் சிங்கள பௌத்த பேரினவாத
அமைப்பான பொதுபல சேனா ஜூலை 7 ஆம் திகதி விசேட மாநாடொன்றை கண்டி போகம்பரையில்
கூட்டியிருந்தது.
இந்த
மாநாட்டில் உரையாற்றியிருந்த அதன் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானாசார தேரர்,
இலங்கையில் சிங்கள ஆட்சியை கட்டியெழுப்ப
வேண்டும் என வலியுறுத்தி அதற்காக சில யோசனைத் திட்டங்களையும் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில்
நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்
கலந்துகொண்ட ஞானாசார தேரர், சிங்கள ஆட்சியை
நிலைநாட்டுவதற்கு முதலில் இலங்கை பௌத்தர்களின் நாடு என தைரியமாக கூறும் ஒருவரை
ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment