இங்கிலாந்தின்
இரண்டு பெற்றோலிய கப்பல்களை
பறிமுதல்
செய்த ஈரான்!
இங்கிலாந்து நாட்டின் இரண்டு பெற்றோலிய சரக்கு கப்பல்களை
ஈரான் கடற்படை பறிமுதல் செய்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் stena impero என்ற ஒரு சரக்கு கப்பலை பறிமுதல்
செய்திருப்பதாக ஈரான் அரசு அறிவித்தது. ஆனால் MV Masdar என்ற மற்றொரு கப்பலையும் ஈரான் கடற்படையினர்
பிடித்துச் சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்து அரசும் ஈரான் அரசைத் தொடர்பு
கொண்டு விளக்கம் கோரியுள்ளது.
நிலைமையை கண்காணித்து வருவதாகவும், வளைகுடாவில் விரும்பத்தகாத சில சம்பவங்கள்
நடந்திருப்பதாகவும் இங்கிலாந்து அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்,
கச்சா எண்ணெயை
சிரியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக இம்மாத தொடக்கத்தில் ஒரு சரக்கு கப்பலை
இங்கிலாந்து கடற்படையினர் பறிமுதல் செய்ததற்கு பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை
எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஈரான் - இங்கிலாந்து நாடுகளுக்கிடையே முறுகல் நிலை
உருவாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment