கல்முனை வடக்கு
பிரதேச செயலகத்திற்கான
நிரந்தர கணக்காளர்
நியமனம்
கோடீஸ்வரனுக்கும்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும்
நன்றி தெரிவித்த
கல்முனை உண்ணாவிரதிகள்
கல்முனை
வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கணக்காளர் நியமனம் தொடர்பில் தோளோடு தோள் நின்று
பாடுபட்டு உழைத்த அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதேச செயலக தரமுயர்த்தல்
தொடர்பில் உண்ணாவிரதத்தினை மேற்கொண்ட உண்ணாவிரதிகள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்றில்
உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை நேரில் இன்று சந்தித்த
உண்ணாவிரதிகள், நன்றியினை தெரிவித்துக்கொண்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள
நடவடிக்கை தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.
கல்முனை
வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி உண்ணாவிரத்தை மேற்கொண்டவர்கள் சார்பில்
கிழக்கு குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள் மற்றும்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் (ராஜன்) ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து
கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்
போது, பிரதேச செயலகத்தின் கணக்காளர் நியமனத்திற்காக தானும் தமது கட்சியும் முன்னெடுத்த
நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்ததுடன் அதற்கான ஆவணங்களையும்
சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடம் காண்பித்துள்ளார்.
மேலும்,
எதிர்காலத்திலும் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்
எனவும் கூறியுள்ளார்.
இதன்போது
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த
மாதம் 15ஆம் திகதி தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொண்டு ஆதரவு
கொடுத்த வணக்கத்திற்குரிய ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர் கிழக்கு குருமார் ஒன்றியத்தின்
தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள், மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெத்தினம்,
வர்த்தக சங்க தலைவர் லிங்கேஸ்வரன் ஆகியோரை நினைவுப்படுத்தி நன்றி தெரிவித்ததுடன் கல்முனை
இளைஞர்கள் மற்றும் இலங்கையில் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்து கலந்து கொண்ட உறவுகளுக்கும்
ஆதரவளித்த புலம் பெயர் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு
மேலாக இரவு பகலாக உழைத்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதன்
பயனாலேயே இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கணக்கும் திறக்கப்பட்டுள்ளதுடன்
கணக்காளர் நியமனமும் நடைபெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
தற்போது கிடைத்துள்ள 70 வீதமான வெற்றி இந்த வருடத்தினுள் முழுமைத்துவம் பெறவேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்காக
எமது நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து குரல் கொடுத்த அத்தனை அரசியல் தலைமைகளுக்கும்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கல்முனை வாழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment