12 பாடசாலைகள் செப்டெம்பர் 16 வரை பூட்டு
ஏனைய பாடசாலைகள்
செப்டெம்பர் 02ஆம் திகதி திறக்கப்படும்
எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை12 பாடசலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாண்டுக்கான உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீடு செய்வது தொடர்பில் குறித்த பாடசாலைகள் இவ்வாறு மூடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 16ஆம் திகதி வரை முதற்கட்ட பணிகள் இடம்பெறவுள்ளதோடு, இதற்காக12 பாடசாலைகள் முற்றாக மூடப்படும் என்பதோடு,26 பாடசாலைகள் பாதியளவில் மூடப்படவுள்ளன.
குறித்த பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் 02ஆம் திகதி, மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பின்வரும் பாடசாலைகள் எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.
கொழும்பு - ரோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா கல்லூரி, கொழும்பு இந்து கல்லூரி, களுத்துறை ஞானோதயா மகா வித்தியாலயம், இரத்தினபுரி மிஹிந்து கல்லூரி, குருணாகல் புனித ஆனா வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி விஹாராமகாதேவி பாலிகா வித்தியாலயம், கண்டி சீத்தாதேவி பாலிகா வித்தியாலயம், காலி வித்தியாலோக வித்தியாலயம், பதுளை விஹாரமகாதேவி பாலிகா வித்தியாலயம், பதுளை ஊவா மகா வித்தியாலயம்.
0 comments:
Post a Comment