ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக
9ஆவது பட்டமளிப்பு விழா இன்று
பதினொரு பயிற்சி நெறிகளை சேர்ந்த
483 பேர் பட்டம் பெறுகின்றனர்
இலங்கையின்
14வது தேசியப்
பல்கலைக்கழகமாக 2005ஆம் ஆண்டு
பதுளையில் ஆரம்பிக்கப்பட்ட
ஊவா வெல்லஸ்ஸ
பல்கலைக்கழகம் தனது 9வது பொதுப் பட்டமளிப்பு விழா
இன்று 31ம் திகதி சனிக்கிழமை ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மாகம் றுகுணுபுர சர்வதேச
மாநாட்டு மையத்தில் மாலை 2 மணிக்கு துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில்
நடைபெறுகிறது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன
நாயக்க தேரர் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கி வைப்பார். முதன்மை விருந்தினராக இலங்கையின்
முன்னணி முயற்சியாண்மையாளரான றைகம் கம்பனிகளின் நிறுவுனர் கலாநிதி ரவி லியனகே கலந்து
சிறப்பிக்கவுள்ளார்.
ஊவா
மாகாணத்தின் தலைநகரான பதுளை நகரில் எழில்மிக்க
மலைப் பிரதேசத்தில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊவா வெல்லஸ்ஸ
பல்கலைக்கழகமானது இலங்கையில் காணப்படும் ஏனைய பல்கலைக்கழகங்களின்
பாரம்பரிய கல்வி
மற்றும் கல்விசார்
நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டுத் திகழ்கின்றது.
தொழிற் சந்தைக்கு
ஏற்ப தனித்துவமான
பாணியில் முயற்சியாண்மையை
மையக் கருவாக்
கொண்டு இலங்கை
மற்றும் உலகளாவிய
வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கும் வகையிலமைந்த கற்கைநெறிகள்,
அத்தியாவசிய மென்திறன்கள் மற்றும் பரந்த பொதுப்
பாடத்திட்டங்களைத் தனது ஒவ்வோர்
பட்டப்பயில்நெறியின் கலைத்திட்டத்திலும் கொண்டுள்ளது.
முயற்சியாண்மையும்
முகாமைத்துவமும், விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள்
முகாமைத்துவம், விலங்கு விஞ்ஞானம், நீர்வாழ் வளங்களும்
தொழில்நுட்பமும், ஏற்றுமதி விவசாயம், தேயிலை தொழில்நுட்பமும்
பெறுமதி சேர்ப்பும்,
பனை இனத்தாவரம்
மற்றும் இறப்பர்
பால் தொழில்நுட்பமும்
பெறுமதி சேர்ப்பும்,
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்,
கனிப்பொருள் வளங்களும் தொழில்நுட்பமும்,
கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம்
மற்றும் உயிர்
முறைமைகள் தொழில்நுட்பம்
ஆகிய பட்டப்பயில்நெறிகள்
முகாமைத்துவ பீடம், விலங்கு விஞ்ஞானம் மற்றும்
ஏற்றுமதி விவசாய
பீடம், பிரயோக
விஞ்ஞான பீடம்,
மற்றும் தொழில்நுட்பக்
கற்றைகள் பீடம்
ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டுவருகின்றன.
முகாமைத்துவ
பீடம், பிரயோக
விஞ்ஞானம் பீடம்,
விலங்கு விஞ்ஞானம்
மற்றும் ஏற்றுமதி
விவசாய பீடம்
ஆகிய பீடங்களின்
11 பயில்நெறிகளைச் சேர்ந்த 483 பட்டதாரிகள்
தமது பட்டங்களை
பெற உள்ளனர்.
0 comments:
Post a Comment