அனைத்து விகாரைகளுக்கும்
அறநெறி மண்டபங்கள்
பௌத்த சமய கல்வி கற்கும்
அனைத்து மாணவர்களுக்கும்
இலவச சீறுடை மற்றும் பகல் உணவு, வழங்க
அரசாங்கம் நடவடிக்கை
- அமைச்சர் சஜித் பிரேமதாச



அறநெறிப் பாடசாலைகளுக்கான மண்டப வசதிகள் இல்லாத அனைத்து விகாரைகளுக்கும் அறநெறி மண்டபங்களை அமைத்துக் கொடுக்க தான் நவம்பர் மாதத்தில் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திம்புலாகல, மஹஉலபத, ஸ்ரீ சுதர்சனாராம விகாரையின் அறநெறிப் பாடசாலை கட்டிடத்தை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களின் சரியான தீர்வின் பின்னர், ஐந்து வருடங்களுக்குள் இந்தச் செயற்திட்டம் பூர்த்தி செய்யப்படும். எதிர்காலத்தில் மரங்களுக்கு கீழ் அறநெறிக் கல்வி வழங்கப்பட மாட்டாது. 'சிசு தஹம் செவன' என்ற மாணவர் அறநெறி நிழல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நிரந்தர மண்டபமொன்றில் அறநெறிக் கல்வியை வழங்கும் நடவடிக்கை ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் நாட்டின் அரசியல் துறையில் பாரிய சமூகப் புரட்சி உருவாகும். அந்த சரியான தீர்மானத்தின் பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அறநெறிக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு பகல் உணவையும், சீருடையையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெறும் எந்தவொரு வரப்பிரசாதமும் தனக்கு அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கான நிவாரணங்களையும், பயன்களையும் பகிர்ந்து கொள்ளும் தரப்புக்கள் தன்னுடன் இணைந்து செயற்பட முடியாமல் போகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top