உணவக சாப்பாட்டை மறுத்து 
வீட்டு சாப்பாடு கேட்டு  
 அடம்பிடிக்கும் சிதம்பரம்

டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தனக்கு வீட்டில் சமைத்த உணவு தான் வேண்டும் என கேட்டு, உணவக சாப்பாட்டை சாப்பிட மறுத்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் ஆக.,26 வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம், தனக்கு உணவக சாப்பாடு வேண்டாம் எனக் கூறி நேற்று (ஆக.,22) இரவு சாப்பிடாமல் இருந்ததாக சிபிஐ தலைமை அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோர்ட் அனுமதி இல்லாமல் வீட்டு உணவு வழங்க முடியாது என அதிகாரிகள் கூறியதால் சிதம்பரம் சாப்பிடாமல் இருந்ததாகவும், பின்னர் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததன் பேரில் சிதம்பரத்திற்கு வீட்டில் சமைத்த உணவே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரவு முழுவதும் யாருடனும் பேசாமல் இருந்த சிதம்பரம், அவரிடம் பேச சென்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் கோபத்துடன் கடுமையாக பேசி உள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரத்த அழுத்தம் போன்றவை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தரைத்தளத்தில் சிதம்பரம் தங்க வைக்கப்பட்டுள்ள அறையில் 2 சிபிஐ அதிகாரிகள் உடன் உள்ளனர். ஏராளமான சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, சிதம்பரத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இடைவிடாது கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரத்திடம் இரவு முழுவதும் விரிவான கேள்விகள் கேட்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் சிதம்பரம் வெளிநாடுகளில் செய்யப்பட்ட பண பரிவர்த்தனை தொடர்பான விபரங்களை அளிக்குள்படி சிபிஐ தரப்பில் 3 நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட பண பரிவர்த்தனைகள் குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பொருளாதார குற்றம் புரிந்ததன் அடிப்படையில், 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக அளித்த நோட்டீசை புறக்கணித்து தொடர்ந்து தலைமைறைவாக இருந்ததாலேயே சிதம்பரத்தை கைது செய்ததாக சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top