யாழில் ஒரே நாளில்
பல்வேறு வேலைத்திட்டங்களை
ஆரம்பித்த ஜனாதிபதி
பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு இன்று (30) சென்றிருந்தார்.
விவசாயம் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சும் மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இந்த நிகழ்வில், விவசாயம் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ஹரிசன் பெர்னான்டோ மற்றும் வடமாகாண ஆளுநார் சுரேன் ராகவன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமாநாதன், மஸ்தான் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நீரியல்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன் யாழ், வடமராட்சி, கப்பூதூவெளி, அந்தணத்திடலில் நன்னீர் திட்டத்தினையும் ஜனாதிபதி இன்று ஆரம்பித்து வைத்தார்.
6×10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நன்னீர் திட்டம் அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் என்ன கருத்து அமைவாக யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கட்டிடம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் சிறிலங்கா கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், எம்.ஏ சுமந்திரன், மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் அரசு அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த நிலையத்தின் ஊடாக வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் தமக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வதுடன் தமது விவரங்களை பதிவு செய்து நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் தேவையான வேலைகளை விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் யாழ்.கைதடியில் அமைக்கப்பட்ட வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியையும் ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்.
இலங்கையில்
மழை நீரை
சேகரித்து மேற்கொள்ளப்படும்
பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப்
பணிகளின் அங்குரார்ப்பண
நிகழ்வு ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
தலைமையில் இன்று
(30) முற்பகல் வடமராட்சியில் இடம்பெற்றது.
யாழ்
மக்கள் நீண்டகாலமாக
முகங்கொடுத்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வளிக்கும்
முகமாக டலில்
இந்த வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்படுவதுடன், இதற்காக இரண்டு
பில்லியன் ரூபா
நிதி செலவிடப்பட்டுள்ளது.
யாழ்
மாவட்டம் நீர்ப்பற்றாக்குறையினால்
மிகுந்த சிரமங்களுக்கு
முகங்கொடுக்கும் மாவட்டமாகும். இந்த பிரதேசத்தில் ஆறு
அல்லது சிறிய
மற்றும் பெரியளவிலான
நீர்த்தேக்கங்கள் எதுவும் காணப்படுவதில்லை. இதனால் 1,012 சதுர
கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட இப்பிரதேசத்திற்கு வருடந்தோறும் 1,250 மில்லிலீற்றருக்கு
மேற்பட்ட மழைவீழ்ச்சி
கிடைக்கப்பெற்றாலும் அந்த நீரை
சேகரிப்பதற்கான வசதிகள் எதுவும் இங்கு அமையப்பெறவில்லை.
எனவே இம்மக்களின்
நீர்த்தேவை நிலத்தடி நீரை அடிப்படையாகக் கொண்டே
பூர்த்தி செய்யப்படுகின்றது.
வருடாந்த
மழைவீழ்ச்சியின் ஒரு பகுதி மாத்திரம் குடா
நாட்டில் அமைந்துள்ள
வடமராட்சி, உப்பாறு மற்றும் ஆனையிறவு ஆகிய
மூன்று களப்புகளில்
தங்கியிருப்பதுடன், அந்த நீரும்
எவ்வித தேவைகளுக்கும்
பயன்படுத்தப்படாது 39 மில்லியன் கனமீற்றர்
நீர் பயனின்றி
கடலுக்கு செல்கின்றது.
யாழ்
குடா நாட்டின்
வருடாந்த நீர்த்தேவையை
பூர்த்தி செய்வதற்கு
18.28 கனமீற்றர் தேவையாகவுள்ளது. அந்த நீரை மிக
இலகுவாக மேற்குறிப்பிட்ட
நீரினூடாக பூர்த்திசெய்வதற்கான
ஆற்றல் காணப்படுவதுடன்,
அதன் அடிப்படையில்
இந்த வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளது.
நீர்ப்பாசனத்
திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தினை இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு
எதிர்பார்க்கப்படுகின்றது.
நிர்மாணப்
பணிகளின் அங்குரார்ப்பண
நிகழ்வில் அமைச்சர்
பீ.ஹரிசன்,
வட மாகாண
ஆளுநர் கலாநிதி
சுரேன் ராகவன்,
மாகாண மக்கள்
பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment