கல்முனை ஆதார வைத்தியசாலை
பள்ளிவாசல் அபிவிருத்தி சம்பந்தமாக
என்ன இடம்பெற்றது?
நிர்வாகத்தின் தலைவர் இப்படி தெரிவிக்கின்றார். . . !
சங்; தேரர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 
கோயில் கட்ட இடம் தர முடியுமா? என வினவினார்

இப்பள்ளிவாசல் சுமார் 50 வருடம் பழைமையானது. இங்கு ஆண்கள் மேல் தளத்திலும்,பெண்கள் கீழ் தளத்திலும் தொழும் வசதிகள் உண்டு.


இதன் பராமரிப்பு கல்முனை நகர பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழே உள்ளது. நான் அதன் தலைவராக இருக்கின்றேன்.



கடந்த 2012ல்...
சுமார் 45 வருடம் பழைமை வாய்ந்தஇப்பள்ளிவாசல் மேற்பரப்பில் கொங்கிறீட் பரப்பு வெடித்து, மழை காலங்களில் உள்ளே தொழும்போது இடுக்குகளினால் ஒழுகும் தண்ணீரில் உடுத்திருக்கும் உடைகள் கரைபடிகின்றன, அத்துடன் பழைமைப்பட்ட இக்கட்டிடத்தின் சீமெந்திப் பூச்சுக்கள் கொட்டுகின்றன. என்று அங்கு கடமை புரியும் எமது முஅத்தினும், தொழுகைக்காக வரும் டாக்டர்களும், உத்தியோகத்தர்களும் நோயாளிகளும் முறைப்பட்டதனால்,

இதுபற்றி 2013ல் அங்கு கடமையாற்றிய டாக்டர் அமீன் அவர்களின் தலைமையில் 2013ல் கலந்தாலோசித்தோம்.
கட்டிடத்தை இடித்து அகற்றாமல் சீற்கூரை அமைத்து பூச்சுக்களை வழித்து மீளவும் பூசி தீந்தை பூசுவதென தீர்மானிக்கப்பட்டது.

பள்ளிவாசல் கட்டிட குறைகளை பூர்த்தி செய்வதற்கான செலவுகளை தங்களே செய்வதற்கு டாக்டர் அமீன் தலைமையிலான குழு பொறுப்பேற்றது.

அதற்கான அனுமதிகளை சுகாதார திணைக்களத்திடமும், MS Dr முரளீஸ்வரனிடமும் பெறப்பட்டது. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

40000/- முன்பணம் பேசி கொடுக்கப்பட்டு கூரைக்கான சாமான்கள் அனைத்தும் கொண்டு வந்து வேலைகள் ஆரம்பிக்க தொடங்கிய போது MS அவர்களினால் உடன் நிறுத்தும்படியும், அபிவிருத்திக் குழுவினை சந்திக்கும் படியும் கூறப்பட்டது.

அவ் வேண்டுதலை ஏற்று நான் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டு விடையங்களை விளக்கி கூரைக்காக 9" அங்குலம் உயர்த்துவதற்கு அனுமதி கேட்டேன். ஒரு அங்குலம் உயர்த்துவதற்கும் அனுமதி தர முடியாது என மறுத்ததோடு
அங்கு சமூகமளித்திருந்த சங்; தேரர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கோயில் கட்ட இடம் தர முடியுமா? என வினவினார்.

அதை அவர்களிடம் கேளுங்கள் "நான் கல்முனை நகர பள்ளிவாசலில் இருந்து வந்திருக்கின்றேன்" எனக்கூறிவிட்டு ஏமாற்றத்துடன் வந்து பறித்த சாமான்கள் அனைத்தையும் ஏற்றி எடுத்துக் கொண்டோம்.

இதில் சுமார் 50000/- நஷ்டம் Dr. அமீன் அவர்களுக்கு ஏற்பட்டது.

சுமார் 6 வருடங்கள் காத்திருந்து பின் கடந்த 5 மாதங்களுக்கு முன்

MS. Dr. முரளிஸ்வரன் அவர்களின் முயற்சியில் /அனுமதியுடன் வெள்ளை நிறத்தை மட்டுமே பூசுவதற்கு பற்பல நிர்ப்பந்தங்களையும்,நிபந்தனைகளையும் தாங்கி மை பூசி அழகு படுத்தப் பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஓர் உண்மையைக் கூற வேண்டும். MS, Dr. முரளீஸ்வரன் நல்லதோர் வேற்றுமையற்ற மனிதர். அவர் பொது நிர்வாகம் என்பதால்,,
வரும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்.

எமது பொறுமைக்கான காரணம் இனமாச்சர்யத்தை ஏற்படுத்தி விட இவ்விடயம்
காரணியாகிவிடக் கூடாது. என்பதுதான்.
கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஐவாத்)
26/8/2019

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top