பசில் ஹக்கீமுக்கிடையில்
முக்கிய சந்திப்பு
சிறிலங்கா
பொதுஜன பெரமுனவின்
முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸவுக்கும், சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீமுக்கிடையில்
முக்கிய சந்திப்பொன்று
நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில
தினங்களுக்கு முன்னர் நடந்த இந்த சந்திப்பில்
தற்போதைய அரசியல்
நிலவரங்கள் மற்றும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல்
உட்பட பல
விடயங்கள் குறித்து
ஆராயப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகின்றது.
வரும்
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்
வேட்பாளர் தெரிவில்
இழுபறி நிலைமை
ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அரசியல் கூட்டணி
அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள பின்னணியில் இந்த
சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment