நிந்தவூர் அல் – அஷ்ரக் பாடசாலை 
மாணவர்கள் 20 பேர்
 கபடி, மெய்வல்லுநர் தேசிய மட்டத்திற்கு தெரிவு

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கபடி போட்டியில் நிந்தவூர் அல் - அஷ்ரக் பாடசாலை மாணவர்கள் 17 வயதுப்பிரிவு ஆண்கள் அணியினர் (12 பேர்) இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கும் மெய்வல்லுநர் போட்டிகளான (தட்டெறிதல், உயரம் பாய்தல், 400 மீ ஓட்டம், 4 X 100 மீ அஞ்சல் ஓட்டம்) ஆகிய போட்டிகளில் (08 பேர்) தேசிய மட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கும், விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான ஆசிரியர் ஏ.ஹலீம் அஹ்மத் மற்றும் பயிற்றுவித்த ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் அனைவரும் பாராட்டி, கௌரவித்து நன்றிகளும் தெரிவித்தனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top