2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில்
பெயர்கள் சேர்க்கப்பட்டமை
சகோதரனை சிக்கலில் மாட்டி விட்ட கோத்தபாய!



கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அனோமா ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த நிலையில், அவர்களின் பெயர்கள் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர், தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அனித்தா பத்திரிகை துணை ஆசிரியர் லசந்த ருஹூனகே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு வாக்களார் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் இவர்கள் இருவரும் அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்களித்துள்ளனரா என்பதை தேடியறிய வேண்டும் எனவும் ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளரின் இந்த முறைப்பாடு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று அல்லது நாளை கூடிய கலந்துரையாட உள்ளனர்.

இலக்கம் 114 மெதமுலன என்ற முகவரியில் வசிப்பதாக கோத்தபாய மற்றும் அவரது மனைவி ஆகியோர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த முகவரியில் உள்ள வீட்டின் தலைமை குடும்பஸ்தர் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச என்பதால், அமெரிக்க பிரஜைகளான கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவியை வாக்காளர் பட்டியலில் சேர்ந்தமை சம்பந்தமாக சமல் ராஜபக்சவும் பதிலளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top