தெமட்டகொட
ஹைரிய்யா
பெண்கள் கல்லூரியின்
மேம்பாலம் திறப்பு
கொழும்பு,
தெமட்டகொட ஹைரியா
பெண்கள் கல்லூரியின்
இரு பகுதி
வகுப்பறைக் கட்டிடங்களை இணைக்கும் மேம்பாலம் அண்மையில்
திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை
அதிபர் ஏ.எல்.எஸ்.நஷீரா தலைமையில்
இடம் பெற்ற
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும்,
பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா கலந்து
கொண்டார். கௌரவ
அதிதிகளாக முன்னாள்
அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல்
மாகாண முன்னாள் ஆளுநர்
அசாத் சாலி,
மேல்மாகாண சபை
முன்னாள் உறுப்பினர்
பாயிஸ், மேல்மாகாண
கல்வித் திணைக்களத்தின்
பணிப்பாளர் சிறிலால் நொய்னிஸ்,உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.
இதன்போது
பிரதம அதிதியால்
மேம்பாலத்தின் நினைவுத் தூபி திரை நீக்கம்
செய்யப்பட்டதுடன் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி,
மேம்பாலத்திற்கான நாடாவை வெட்டி பாலத்தை திறந்து
வைத்தார். மேலும்
பாடசாலை போட்டிகள்
மற்றும் பாடவிதானங்களில்
பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவிகளுக்கு
சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
மாணவிகளின் கலை, கலாசார நிகழ்வுகளும்
இங்கு இடம்
பெற்றன.
0 comments:
Post a Comment