முஸ்லிம் பெண்கள் இனியும்
கண்ணீர் சிந்த முடியாது
- முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்
முஸ்லிம்
திருமணம் மற்றும்
விவாகரத்து சட்டம் திருத்தப்படும் போது 18 வயது
வரை மாத்திரமே
திருத்தப்பட வேண்டும் என புதிய சிறகுகள்
´நியூ விங்ஸ்´
அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த
அமைப்பினால் நடத்தப்பட்ட ´கண்ணீர் துளி பாரமாகியுள்ளது´
என்ற தொனிப்
பொருளிலான குழு
விவாதத்தில் இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இந்த
விவாத நிகழ்ச்சி
நேற்றுமுன்தினம் (23) கொழும்பில் இடம்பெற்றது.
உயிர்த்த
ஞாயிறு தாக்குதலுக்குப்
பின்னர், காதி
நீதிமன்றங்கள் தொடர்பாகவும் முஸ்லிம் திருமண சட்டங்களை
கையாள்வது பற்றி
பேசப்பட்டு வருகின்றது.
இந்த
அழுத்தங்களின் பின்னணியில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும்
பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் திருமணம் மற்றும்
விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து
கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த
யோசனைக்கு அண்மையில்
அமைச்சரவை அனுமதியும்
பெறப்பட்டது.
இதற்கிடையில்,
முஸ்லிம் திருமணம்
மற்றும் விவாகரத்து
சட்டம் குறித்த
சிறப்பு விவாதம்
நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்றது.
இந்த
நிகழ்வில் கருத்து
தெரிவித்த முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், விவாகரத்துக்குப்
பிறகு, குழந்தைகளின்
பாதுகாவலர் யார்? அந்த குடும்பத்தை பராமரிப்பவர்
யார் என்ற
பிரச்சினைகள் எழும்.
எனவே,
சிறிய மாற்றங்களை
செய்யாதீர்கள். நாங்கள் கோரும் அனைத்து திருத்தங்களையும்
ஒன்றாகச் சேர்த்து
முஸ்லிம் திருமண
மற்றும் விவாகரத்து
சட்டத்தில் திருத்தம் செய்யுங்கள். முஸ்லிம் பெண்கள்
இனியும் கண்ணீர்
சிந்த முடியாது
என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment